ஆனால் அதே நேரத்தில், ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட திரைப்படத்தை இன்னொரு மொழியில் டப்பிங் செய்ய, டப்பிங் கலைஞர்கள் மற்றும் செலவுகள் அதிகமாகின்றன.
இந்த நிலையில், தற்போது AI தொழில்நுட்பம் மூலம் எந்த மொழியில் இருந்து எந்த மொழிக்காக வேண்டுமானாலும் டப்பிங் செய்யும் வசதி வந்துவிட்டதால், டப்பிங் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். ஏற்கனவே YouTube சேனலில் டப்பிங் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் உள்ள வீடியோக்கள் ஹிந்தி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசிய, ஜப்பான் போன்ற பிற மொழிகளில் தானாகவே டப்பிங் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தற்போது அமேசான் பிரைம் தங்களிடம் உள்ள ஒரே ஒரு மொழியில் இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்களை பல மொழிகளுக்கு AI டெக்னாலஜி மூலம் டப்பிங் செய்ய திட்டமிட்டுள்ளது. மனிதர்கள் டப்பிங் செய்வதுபோல அச்சு அசலாகவே, எந்த மொழிக்காக வேண்டுமானாலும் இது தானாகவே டப்பிங் செய்யும். இதன் மூலம் பல மொழிகளை சேர்ந்தவர்கள் ஒரே தொடரை மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள், இதனால் வணிகம் கூடும் என்றும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், எந்தெந்த மொழிகளுக்கு AI டப்பிங் செய்யப்படும் என்பது குறித்து அமேசான் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. நாளடைவில், ஒரே ஒரு மொழியில் மட்டுமே திரைப்படம் தயாரித்து, AI தொழில்நுட்பம் மூலம் மிக ஒருசில மணி நேரத்தில் எளிதாக பல மொழிகளில் டப்பிங் செய்யும் முறை கடைபிடிக்கப்படும். இதனால், டப்பிங் கலைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக கருதப்படுகிறது.