உலக வரலாற்றில் முதல் முறையாக, ஏஐ டெக்னாலஜி செயல்பாட்டிற்காக சொந்தமாக ஒரு அணு மின் நிலையத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், அடுத்த தலைமுறையில் ஏஐ டெக்னாலஜி முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்றும் இதனால் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு வெகுவாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏஐ டெக்னாலஜியை உருவாக்குவதில் போட்டிகள் அதிகமாக உள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏஐ டெக்னாலஜி பயன்படுத்துவதற்காக சொந்தமாக அணுமின் நிலையத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அணு மின் நிலையத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கான இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் அணுமின் நிலையத்தை வாங்கினால், இதனைத் தொடர்ந்து கூகுள், அமேசான், மெட்டா, ஆப்பிள், ஓபன் ஏஐ ஆகிய நிறுவனங்களும் அணுமின் நிலையம் அல்லது அதற்கு இணையான ஒன்றை வாங்குவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.