கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் ஊழியர்கள்: AI காரணமா?

By Bala Siva

Published:

கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா போன்ற நிறுவனங்களில் இருந்து திறமையான ஊழியர்கள் பல திடீர் திடீரென வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் கொத்து கொத்தாக ஊழியர்கள் வெளியேறி வருவதால் அந் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக கூகுள் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் செலவை குறைப்பதற்காக வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் வேலை நீக்க நடவடிக்கையால் வேலை பறிபோன ஊழியர்கள் பலர் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமான முதலாளிகளாக மாறி உள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி AI தொழில் நுட்ப நிறுவனங்களில் இணைந்து அவர்கள் கூடுதலாக சம்பளம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எப்போது வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் பலர் தற்போது நிறுவனங்களில் இருந்து வெளியேறி சொந்தமாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதாகவும் அதுமட்டுமின்றி வருங்காலத்தில் இனி AI தொழில்நுட்பம் தான் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்பதால் AI தொழில்நுட்ப குறித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒரு குழுவாக இணைந்து தொடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் திறமையான ஊழியர்கள் வெளியேற்றும் காரணமாக கூகுள் மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா நிறுவனங்கள் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் செலவை குறைக்க வேண்டும் என்று ஊழியர்களை வெளியேற்றிய இந்நிறுவனங்கள் தற்போது மீண்டும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் பலர் தற்போது ஸ்டார்ட் அப் தொடங்கி முதலாளிகளாக மாறி உள்ளதே வேலையிலிருந்து வெளியேறுபவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை நாள் தான் ஒரு நிறுவனத்தில் கைகட்டி வேலை பார்க்க முடியும் நாமும் முதலாளி ஆகிவிடுவோம் என்று திறமையான பலர் முடிவு செய்துவிட்டால் தான் கொத்துக்கொத்தாக வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.