சுதர்சன சக்கரம், ஆகாஷ் மட்டுமல்ல.. புதிய அறிமுகமாக பர்கவாஸ்திரா.. இனி வாலாட்ட நினைத்தால் சங்கு தான்..!

  பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான “ஆபரேஷன் சிந்தூர்” பின்புலத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ட்ரோன் தாக்குதல்களை நடத்திய நிலையில், இந்தியா இன்று பர்கவாஸ்திரா (Bhargavastra) எனும் குறைந்த செலவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய எதிர்-ட்ரோன்…

new

 

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான “ஆபரேஷன் சிந்தூர்” பின்புலத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ட்ரோன் தாக்குதல்களை நடத்திய நிலையில், இந்தியா இன்று பர்கவாஸ்திரா (Bhargavastra) எனும் குறைந்த செலவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய எதிர்-ட்ரோன் (counter-drone) ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை, ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள SeaWard Firing Range பகுதியில் நடைபெற்றது என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த பர்கவாஸ்திரா அமைப்பை Solar Defence and Aerospace Limited (SDAL) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது குறிப்பாக எதிரிகளின் ட்ரோன் குழுக்களை (hostile drone swarms) சுட்டுத் தகர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ட்ரோன்கள் சமீபத்திய ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் பாகிஸ்தான் ஆதரித்த தாக்குதல்களிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

பர்கவாஸ்திரா ஒரு ‘ஹார்ட்கில்’ (Hard-Kill) தொழில்நுட்பத்தை கொண்டது. இது 2.5 கிலோமீட்டர் தூரத்துக்குள் வரும் சிறிய அல்லது குறுகிய ரேடியஸ் ட்ரோன்களை கண்டறிந்து அழிக்க கூடிய திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் மைக்ரோ ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டன. மேலும் திட்டமிட்ட செயல்திறன் அளவுகோள்களை எல்லாம் பூர்த்தி செய்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று வெவ்வேறு சோதனைகள் நடைபெற்றதாக இந்திய இராணுவ வான்வழி பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

ஏற்கனவே இந்தியாவில் சுதர்சன சக்கரம், ஆகாஷ் ஆகிய வலிமை வாய்ந்த ஏவுகணைகள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக பர்கவாஸ்திரா இணைந்துள்ளதால் இந்தியாவிடம் வாலாட்ட நினைக்கும் நாடுகளுக்கு சங்கு தான் என கூறப்படுகிறது.