ChatGPT பயனர்கள், தற்போது இணையத்தை பரப்பி வரும் ஒரு புதுமையான ட்ரெண்டை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு ஜிப்லி ட்ரெண்ட் சோஷியல் மீடியாவை ஆட்கொண்ட நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. இப்போது, மக்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி, ChatGPT-யை கொண்டு கலைப்படைப்புகள் மட்டுமின்றி, சுவாரஸ்யமான மற்றும் கேளிக்கையான படங்களையும் உருவாக்கச் சொல்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை மனிதர்களாக மாற்றும் ட்ரெண்ட்டை உருவாக்கியுள்ளனர்! ஆம், உங்கள் நாயா, பூனையா என்றெல்லாம் முக்கியமில்லை, ChatGPT மற்றும் பிற AI கலை உருவாக்கும் கருவிகள் மூலம், மக்கள் தங்கள் செல்லப்பிராணி நண்பர்களை “மனித வடிவமாக” மாற்றி மகிழ்ச்சியுடன் ஷேர் செய்கின்றனர்.
X , Reddit மற்றும் Instagram போன்ற தளங்களில், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளின் AI உருவாக்கப்பட்ட ‘மனித வடிவங்களை’ பதிவிட்டு கலக்குகிறார்கள். சில படங்கள் சிரிக்க வைக்கும் வகையில் இருப்பதோடு, சில சுவாரஸ்யமானவையாகவும், சில படைப்பாற்றலோடு உருவாக்கப்பட்டவையாகவும் உள்ளன.
ChatGPT-யை பயன்படுத்தி உங்கள் செல்லப்பிராணியின் “மனித வடிவத்தை” எப்படி உருவாக்குவது என்பதை இப்போது பார்போம்
சமீபத்தில், OpenAI அறிமுகம் செய்த GPT-4o மாடல் வசதி இதற்கு வேண்டும். அதுமட்டுமின்றி சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் அளிக்கும் “prompt”-களும் படைப்பாற்றலோடு இருக்க வேண்டும்.
உங்கள் செல்லப்பிராணியின் புகைப்படத்தை ChatGPT-யில் மனித வடிவமாக மாற்ற, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்:
ChatGPT-யை திறந்து, உங்கள் செல்லப்பிராணியின் புகைப்படத்தை Chat சாளரத்தில் பதிவேற்றவும். படைப்பாற்றல் நிறைந்த ஒரு prompt கொடுக்கவும். உதாரணமாக “என் நாயை ஒரு மனிதராக மாற்று’ “என் பூனை மனித வடிவமாக இருந்தால் எப்படி இருப்பாள்?” “இந்த புகைப்படத்தில் உள்ள செல்லப்பிராணியை மனிதராக மாற்று.”
என கொடுக்கலாம். ChatGPT சில விளக்கம் கேட்கலாம். உங்கள் விருப்பப்படி உருவாக்கச் சொல்லலாம் ஆண், பெண் அல்லது யாரும் கண்டிக்காத வகை புதிய வகை, குழந்தை, இளைஞன், பெரியவர் போன்ற தகவல்களையும் சொல்லலாம்.
உங்கள் செல்லப்பிராணியின் முகபாவனை, உடல் மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான மனித வடிவமாகவே மாற்றச் சொல்லலாம். தேவையான தகவல்களை வழங்கியபின், ChatGPT உங்கள் செல்லப்பிராணியின் “மனித வடிவ” படத்தை உருவாக்கி தரும். அதை நீங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழலாம்.