நடன இயக்குநரும், டிஜிட்டல் கிரியேட்டருமான தனஸ்ரீ வர்மா, கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரிந்த பிறகு, தற்போது தனிமையை கடந்து வருகிறார். தனது இளமை காலத்தை துபாயில் கழித்த தனஸ்ரீ, சமீபத்தில் அங்கு மீண்டும் சென்றபோது, அதன் வளர்ச்சி அவருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனஸ்ரீ, தனது துபாய் பயணத்தின்போது அங்குள்ள இந்து கோயிலுக்குச் சென்ற அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணத்தில் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது.
துபாயில் உணர்வுபூர்வமான பயணம்
தனது துபாய் பயணத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த தனஸ்ரீ, அங்குள்ள அமைதியான இந்துக் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ததை குறிப்பிட்டுள்ளார். துபாய் கட்டடக்கலை ரீதியாக மட்டுமல்லாமல், பல்வேறு கலாசாரங்களை ஏற்றுக்கொள்வதிலும், சமூக நல்லிணக்கத்திலும் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்பதை அவர் வியந்து கூறியுள்ளார். இந்த சந்திப்பு அவருக்கு ஒரு விதமான ஆறுதலையும், மன அமைதியையும் அளித்துள்ளது.
தனது பதிவில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு துபாய்க்கு வந்திருக்கிறேன். இங்கு வளர்ந்தது எனக்கு நிறைய நினைவுகளை கொடுத்தது. இந்த நகரம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதைப் பார்ப்பது பிரமிப்பாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தது. இந்த அழகான இந்து கோயிலுக்குச் சென்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இது மன அமைதியையும், சக்திமிக்க உணர்வையும் கொடுத்தது. கலாசாரம் மற்றும் சமூகத்தை ஏற்றுக்கொள்வதில் இந்த நகரம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதற்கான ஒரு நினைவுறுத்தல் இது. இந்த வளர்ச்சிக்கும், வேர்களுக்கும், மீண்டும் இணைந்ததற்கும் நன்றி” என்று எழுதியுள்ளார்.
பழைய நினைவுகளை புதுப்பித்ததுடன், துபாயின் இரவு வாழ்க்கை மற்றும் உணவு வகைகளையும் தனஸ்ரீ அனுபவித்திருக்கிறார். இதன் மூலம், தனது தற்போதைய வாழ்க்கையை அவர் ரசித்து வாழ்கிறார் என்பது தெரிகிறது.
சாஹலின் வெளிப்படையான கருத்து
தனஸ்ரீ தனது முன்னாள் கணவர் சாஹல் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் “எங்கள் உறவில் நீண்ட நாட்களாக சிக்கல்கள் இருந்தன. இருப்பினும், நாங்கள் பிரிந்துவிட்டோம் என்பதை பொதுவெளியில் காட்ட விரும்பவில்லை. சமூக வலைதளங்களில் நாங்கள் ஒரு சாதாரண தம்பதி போலவே இருந்தோம்” என்று சாஹல் கூறியிருந்தார்.
2020 டிசம்பரில் தனஸ்ரீயும் சாஹலும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2025 மார்ச் மாதம் இருவரும் அதிகாரபூர்வமாக பிரிந்தனர். அவர்களின் திடீர் பிரிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது சாஹல், ஆர்.ஜே. மஹ்வாஷ் என்பவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், தான் தற்போது தனிமையில் இருப்பதாக அவர் கூறி வருகிறார்.
புயலுக்குப் பின்னால் ஆன்மிகம்
வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுபூர்வமான சோதனைகளின்போது, பலர் மன அமைதிக்காக ஆன்மிகத்தை நாடுகின்றனர். தனஸ்ரீயின் கோயில் பயணமும் அதையே பிரதிபலிக்கிறது. துயரங்கள், மாற்றங்கள் அல்லது இழப்புகளிலிருந்து வெளியே வர, ஆன்மிகம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக அமைகிறது. அது தனக்குள்ளேயே ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, எதிர்காலம் நிச்சயமற்றதாக தோன்றும்போதும், தெளிவையும் அமைதியையும் அளிக்கிறது. தனஸ்ரீயின் கோயில் பயணம், அவர் மனதளவில் இன்னும் பலமாக எழுவதை குறிக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
