அதிமுக பலவீனமாக பலவீனமாக விஜய்க்கு லாபம்.. அண்ணா பெயரை உச்சரித்ததே ஒரு strategy தான்.. அதிமுக ஓட்டு, திமுக, பாஜக எதிர்ப்பு ஓட்டுக்கே குறி..!

தமிழக அரசியல் களத்தில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இரு பெரும் திராவிட கட்சிகளாக பல பத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில், தி.மு.க. ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோஇருந்தாலும் வலுவாகவே இருந்து வருகிறது. அதை உடைக்க வைகோ…

admk vijay

தமிழக அரசியல் களத்தில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இரு பெரும் திராவிட கட்சிகளாக பல பத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில், தி.மு.க. ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோஇருந்தாலும் வலுவாகவே இருந்து வருகிறது. அதை உடைக்க வைகோ உட்பட பலரின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. ஆனால், அ.தி.மு.க., ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மெல்ல மெல்ல பலவீனமடைந்து வருகிறது. இந்த பலவீனம், புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு ஒரு பெரும் சாதகமாக மாறியுள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பிளவு மற்றும் தலைமைச் சிக்கல்:

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் போன்ற முக்கிய தலைவர்கள் வெளியேறியது, அ.தி.மு.க.வின் கட்டமைப்பை பலவீனப்படுத்தியது. தற்போது எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்றுள்ள போதிலும், உட்கட்சி பூசல்கள் முழுமையாக நீங்கவில்லை.

கொள்கை ரீதியான விலகல்:

அ.தி.மு.க. தனது திராவிட கொள்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கி வருகிறது என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. குறிப்பாக, மதுரையில் நடந்த முருகர் மாநாட்டில், அண்ணா குறித்து இழிவாக பேசப்பட்டபோது கூட, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் தரப்பிலிருந்து ஒரு வலிமையான கண்டன அறிக்கை வெளியிட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, அக்கட்சியின் கொள்கை உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியது.

பா.ஜ.க.வுடனான கூட்டணி:

எப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது, அப்போதே அக்கட்சியின் ஆதரவாளர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலை கொண்ட அ.தி.மு.க. தொண்டர்கள், இந்த கூட்டணியால் கட்சியில் இருந்து விலகி சென்றனர்.

அ.தி.மு.க.வின் பலவீனம் – விஜய்க்கு லாபம்

அ.தி.மு.க.வின் இந்த பலவீனம் தான் விஜய்யின் பலமாக பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தபோதே, அ.தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அந்த கூட்டணிக்கு எதிராக திரும்பிவிட்டனர். அந்த சமயத்திலிருந்தே விஜய், தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்படும் ஒரு நபராக மாறிவிட்டார். தி.மு.க.வுக்கு மாற்றாக யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழும்போது, “விஜய்யா, எடப்பாடி பழனிசாமியா?” என்ற கேள்விக்கு, பலரது பதில் “விஜய்” ஆகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் வியூகம்: ‘அண்ணா’ பெயர் மற்றும் வாக்கு வங்கி இலக்குகள்

விஜய் சமீபத்த்ஹில் அண்ணாவின் பெயரை உச்சரித்ததே ஒரு திட்டமிடப்பட்ட வியூகம் தான் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அ.தி.மு.க.வின் ஆதரவாளர்கள், குறிப்பாக பெண்கள் மத்தியிலுள்ள அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்குகளை கவர விஜய் முயல்கிறார். அ.தி.மு.க.வை விஜய் நேரடியாக விமர்சனம் செய்யாமல் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

விஜயின் வியூகத்தில் உள்ள முக்கிய வாக்கு வங்கி இலக்குகள்:

அ.தி.மு.க.வின் வாக்குகள் (குறிப்பாகப் பெண்களின் வாக்குகள்)

தி.மு.க. மற்றும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள்

சிறுபான்மையினர் வாக்குகள்

இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்களின் வாக்குகள்

ரசிகர்களின் வாக்குகள்

இந்த அனைத்து வாக்கு வங்கிகளையும் ஒருங்கிணைத்தால், விஜய்யின் கட்சி 30% வாக்குகளை மிக எளிதில் தாண்டிவிடும் என்றும், இது மும்முனை போட்டியில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றுக் கொடுக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்காலம்: சாத்தியமா?

விஜய்யின் இந்த அரசியல் வியூகம் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வின் பலவீனம் அவருக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக இருந்தாலும், அதை அவர் எவ்வாறு அரசியல் ரீதியாக மாற்றிக்கொள்கிறார் என்பதை பொருத்துதான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.