அதானி குழும நிறுவனங்களின் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்திய நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் மூன்றாம் இடத்திலிருந்து அதானி 20-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டார் என்பதும் அவருடைய சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழும நிறுவங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது என்பதும் குறிப்பாக எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் அதன் பாலிசிதாரர்களுக்கும் நஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்பட்டது.
ஹிண்டர்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என்று அதானி நிறுவனம் விளக்கம் அளித்திருந்த நிலையில் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்திருந்த நிலையில் அந்த குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியான போது அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நேற்று மளமள என உயர்ந்தன. இதனை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 10 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்தது என்பதும் இந்நிறுவனத்திற்கு நல்ல லாபம் என்றும், அதானி குழும பங்குகளை வைத்திருந்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சாப்ரே என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் அதானி குழும பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செபி தரப்பிலும் எந்த ஒரு தவறும் அதானி குழும நிர்வாகத்திடமிருந்து நடைபெறவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை தாக்கல் செய்த உடனே நேற்றைய பங்குச்சந்தையில் அதானி குடும்பங்களின் பங்குகள் மளமளவென உயர்ந்தன. ஒட்டுமொத்தமாக 10 லட்சம் கோடிக்கு மேல் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் உயர்ந்தது. குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ் தங்குகள் நேற்று ஒரே நாளில் சுமார் 20 சதவீதம் உயர்ந்தது என்பதும் அதானி வில்மர் 10%, அதானி போர்ட்ஸ் 6.4% உயர்ந்தன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டோட்டல் காஸ், அதானி டிரான்ஸ்மிஷன், என்டிடிவி பங்குகள் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதும் அதானி மீது குற்றம் சாட்டிய அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது வாயை மூடி மௌனமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.