சுயேட்சை எம்.எல்.ஏவுடன் திருமணம்…. சினிமாக்கு பைபை சொன்ன நவ்நீதி கவுர்… இப்போ அரசியலில் பிஸி…!!

தமிழ் நடிகை ஒருவர் சுயேச்சை எம்எல்ஏவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். அந்த நடிகை தான் நவ்நீதி கவுர். இவர் திருமணம் செய்து கொண்ட சுயேச்சை எம்எல்ஏ…

நவ்நீதி கவுர்

தமிழ் நடிகை ஒருவர் சுயேச்சை எம்எல்ஏவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். அந்த நடிகை தான் நவ்நீதி கவுர். இவர் திருமணம் செய்து கொண்ட சுயேச்சை எம்எல்ஏ மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியை சேர்ந்த ரவிரானா.

கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி இந்த திருமணம் நடந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்த பிரிதிவிராஜ் சவான் அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டார். அதேபோல் பாபா ராம்தேவ் அவர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு ரவிரானா – நவ்நீத் கவுர் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் திடீரென நடிகையான அதிசயம்..‘நெஞ்சத்தை கிள்ளாதே’ வெற்றிக்கதை..!

navneet kaur1

நடிகை நவ்நீத் கவுர் கடந்த 2004 ஆம் ஆண்டு தர்ஷன்  என்ற கன்னட திரைப்படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார்.  அவருக்கு ஜெகபதி பாபு  என்ற படம் திருப்புமுனையை கொடுத்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த மஹரதி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை பி வாசு இயக்கி இருந்தார். அதன் பிறகு அவர் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக யமதொங்கா என்ற படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நவ்நீத் கவுர் நடித்தார். இந்தியாவை அழிப்பதற்காக கனடா நாட்டில் இருந்து ஒரு வில்லன் கும்பல் கிளம்பிய நிலையில் விஜயகாந்த் நேரடியாக கனடா சென்று அந்த வில்லன்களை அடித்து நொறுக்குவார். இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடித்த நிலையில் அதில் ஒருவர் தான் நவிநீத் கவுர். விஜயகாந்துடன் இவருக்கு டூயட் பாடலும் உண்டு.

ரஜினி படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த நடிகை.. தற்கொலை முயற்சி.. வடிவுக்கரசியின் வாழ்க்கை நிகழ்வுகள்..!

இதன் பிறகு கருணாஸ் நாயகனாக நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற திரைப்படத்திலும் நாயகியாக நடித்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அம்பாசமுத்திரம் அம்பானி’படத்திற்கு பிறகு அவர் ஒரே ஒரு பஞ்சாபி படத்தில் மட்டும் தான் நடித்தார். அதன் பிறகு திருமணம் ஆன பிறகு முழுமையாக திரையுலகையிலிருந்து விலகினார்.  navneet kaur

சுயேச்சை எம்எல்ஏ ரவிரானாவை திருமணம் செய்து கொண்ட பின் அவர் கணவரின் வழியில் அரசியலில் ஈடுபட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் 2019 ஆம் ஆண்டு அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.

14 வயதில் அறிமுகம்.. 16 வயதில் தேசிய விருது.. 22 வயதில் எதிர்பாராத மரணம்.. புகழின் உச்சம் சென்ற நடிகை..!

நடிகை நவிநீத் கவுரை திருமணம் செய்து கொண்ட ரவி ராணா மூன்று முறை அமராவதி மாவட்டத்தில் உள்ள பத்னேரா என்ற தொகுதியில் சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொகுதியில் அவர் மிகுந்த செல்வாக்கு உடையவர்.  கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா வேட்பாளர் பிரிதி சஞ்சய் பந்தை 15541 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக உறுப்பினர் ஆனார். அதன்பிறகு, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனையின்றி  ஆதரவளித்தார்.