தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை நமீதா. பா.ஜ.க செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள நமீதா தற்போது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மீண்டும் நல்ல கதை முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிக்க முயற்சித்து வரும் நமீதா குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடு வருகிறார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை நமீதா குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்றிருக்கிறார். அப்போது கோவிலில் உள்ள அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அவரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டபோது நமீதா இந்து என்பதற்கான சான்றிதழைக் கேட்டுள்ளனர். விளக்கம் கொடுத்தபின்னர் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர்.
சினிமாவுக்காக படித்த சான்றிதழையே கிழித்துப் போட்டு வந்த மாரி செல்ராஜ்.. படைப்புகள் மேல் இவ்ளோ காதலா?
இதனையடுத்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றப் பதிவிட்டிருக்கிறார். அதில் முதன் முறையாக நான் இந்து என்பதை நிரூபிக்க வேண்டியிருப்பதற்கான சூழல் வந்திருப்பதால் சொந்த நாட்டிலேயே அந்நியமாக உணர்கிறேன். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற என்னை நீங்கள் இந்து என்பதற்கான சான்றிதழையும், சாதி சான்றிதழையும் கேட்டனர். இதுவரை எத்தனையோ கோவில்களுக்குச் சென்றிருக்கேன். என்னை யாரும் இப்படிக் கேட்டதில்லை.
எனது திருமணம் திருப்பதியில் தான் நடைபெற்றது. என்னுடைய குழந்தைகளுக்கும் இந்துப் பெயர்களையே வைத்திருக்கிறேன். அமைச்சர் சேகர் பாபு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தரப்பில் முக்கியப் பிரமுகர்கள் யாராவது வருகை தந்தால் சான்றிதழ்கள் கேட்கப்படுவது வழக்கமான நடைமுறையே என்று பதில் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.