நடிகை ரன்யா ராவ் அடிக்கடி தனது கணவருடன் துபாய் செல்வதை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து, அவரை கண்காணிக்க தொடங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, துபாயில் இருந்து பெங்களூரு வந்த அவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையின் போது, 14 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதனால், அவர் கைது செய்யப்பட்டார்.
அவருடைய கணவரிடம் விசாரணை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர் பாதுகாப்பு சோதனையை தவிர்ப்பதற்காக, ஒரு காவலர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகை ரன்யா அளித்த வாக்குமூலத்தில், தன்னை தங்கம் கடத்துமாறு ஒரு கும்பல் மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கும்பல் யார்? எங்கிருந்து அவர் மீது அழுத்தம் கொடுத்தனர்? இது பெரிய கடத்தல் குழுவின் செயலாக இருக்குமா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் காண, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நடிகையை மிரட்டி தங்கம் கடத்த வைத்துள்ளதாக வெளிவந்த தகவல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.