கேப்டன் இல்லத்தில் தளபதி… அட… இதுதான் காரணமா…?

By Meena

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1984 ஆம் ஆண்டு வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார் விஜய். பின்னர் தனது 18 வது வயதில் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் விஜய்.

அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி ஆகிய ஹிட் படங்களில் நடித்தார் விஜய். 2000களில் ஆரம்ப காலகட்டத்தில் சமூக சீர்திருத்த கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களை கவர்ந்த விஜய் நட்சத்திர அந்தஸ்து பெற்று முன்னணி நடிகராக ஆனார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் விஜய். நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் ஆகவும் பிரபலமானார் விஜய்.

இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட்டானவைகள்தான். தமிழ் சினிமாவில் வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்யும் தமிழ் படங்களில் இவரது படங்கள் பெரும்பாலானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருந்து வரும் விஜய் தமிழக மக்களுக்காக பணியாற்ற விரும்பி சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார் விஜய். ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளார் விஜய்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி விஜய் நடித்துள்ள படம் கோட். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் அவர்களை படத்தில் நடிக்க அனுமதி தந்ததற்காக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார் விஜய்.