ஓடும் பேருந்தில் திடீரென பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி.. கண்டக்டர் செய்த நெகிழ்ச்சியான காரியம்

Published:

நேற்று ரக்ஷாபந்தன் தினம் என்பதால் நாடு முழுவதும் இப்பண்டிகை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தனது சகோதரனுக்காக ராக்கி கயிறு கட்டுவதற்காகச் சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று அரசுப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஓட்டுநரும், நடத்துநரும் சாலையோரமாக பேருந்தை நிறுத்தினர். அப்பேருந்தில் பெண் நடத்துனர் பாரதி அப்போது பணியில் இருந்திருக்கிறார்.

மேலும் அதே பேருந்தில் செவிலியர் ஒருவரும் பயணித்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகவே நடத்துநர் பாரதியும், செவிலியரும் இணைந்து அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துள்ளனர். அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் குழந்தையும், தாயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் கல்லா கட்டிய சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்.. 31 ஆண்டுகளுக்குப் பிறகு குறையாத அதே மவுசு

ஓடும்பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு துளியும் தாமதிக்காமல் சமயோசிதமாகச் செயல்பட்ட பெண் நடத்துனர் பாரதி மற்றும் செவிலியருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தைகள் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் தெலுங்கானா அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே ஒரு பெண் அரசுப் பேருந்தில் செல்லும் போது இதேபோன்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டு பேருந்திலேயே குழந்தையை பெற்றெடுத்த போது அக்குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் உங்களுக்காக...