2026 தேர்தலில் விஜய் கட்சி தலைமையில் மெகா கூட்டணியா? என்ன செய்ய போகிறது திமுக அதிமுக?

Published:

தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு பின் அரசியல் கட்சி ஆரம்பித்த எந்த நடிகரும் வெற்றி பெறவில்லை என்றும் அந்த பட்டியலில் தான் விஜய்யும் சேர்வார் என்று பொதுவாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தாலும் விஜய்யின் திட்டமே வேறு என்று சில விவரம் அறிந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்களை கணக்கில் கொண்டால் விஜய் அளவுக்கு மாஸ் நடிகர் யாரும் இல்லை என்று சொல்லலாம். விஜயகாந்த் கூட ஒரு கட்டத்தில் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்த பின்னர் தான் அரசியலுக்கு வந்தார் என்பதும் அரசியலுக்கு வரும் போது அவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன் முதல் சரத்குமார் வரை பலரும் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய்யின் திட்டமே வேறு என்றும் குறிப்பாக அவர் இளைய தலைமுறை வாக்காளர்களை தான் கவர முயற்சி செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக, திமுக என மாறி மாறி வாக்களித்து ஒரு கட்டத்தில் வாக்களிக்களிப்பதையே வெறுத்து போயிருக்கும் வாக்காளர்கள் மற்றும் இளைய தலைமுறை வாக்காளர்கள் என மொத்தம் இருக்கும் 30 சதவீத வாக்காளர்களை தான் விஜய் குறி வைத்துள்ளார்.

குறிப்பாக இளைஞர்கள், மாணவ மாணவிகளை கவர அவர் முயற்சித்து வருகிறார் என்றும் இன்றைய மாணவ மாணவிகள் 2026 ஆம் ஆண்டு முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களாக மாறுவார்கள் என்றும் அவர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெற வேண்டும் என்பதே விஜய்யின் திட்டமாக உள்ளது.

அதுமட்டுமின்றி எவ்வளவு பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை கூட்டணி இன்றி வெற்றி பெற முடியாது என்பதிலும் விஜய் தெளிவாக இருக்கிறார். எனவேதான் நான் தமிழர் கட்சி உட்பட ஒரு சில கட்சிகளுடன் அவர் கூட்டணியாக வைக்கவும் திட்டமிட்டு வருகிறார் என்றும் சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள ஒரு முக்கிய அரசியல் கட்சி தலைவரை நேரில் ரகசியமாக சந்தித்து விஜய் பேசியதாகவும் கூறப்படுகிறது.

எனவே விஜய் பத்தோடு பதினொன்றாக அரசியல் களத்தில் இறங்காமல் மிகவும் ஆழமாக சிந்தித்து ஒரே முயற்சியில் வெற்றி பெற்று முதல்வர் ஆவது எப்படி என்ற திட்டத்தோடு தான் வருகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய்யின் திட்டத்தை முறியடிக்க அதிமுக, திமுக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...