ரூ.60,000 விலையில் ஒரு சூப்பர் லேப்டாப்.. மாணவர்களுக்கு செம்ம பொருத்தமானது..!

Published:

கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு என தயாரான Acer Swift 3 என்ற லேப்டாப் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் லேப்டாப் அதிக அளவில் விற்பனை ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இரண்டு மாடல்களில் வெளியாகி உள்ள இந்த லேப்டாப் குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்.

Acer Swift 3 (SF314-43) என்ற மாடல் லேப்டாப்  AMD Ryzen 5 5500U பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 8GB ரேம் மற்றும் 512GB SSD இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த லேப்டாப் 14 இன்ச் முழு HD டிஸ்ப்ளே மற்றும் 1.25 கிலோ எடை கொண்டது. இந்தியாவில் Acer Swift 3 (SF314-43) விலை ரூ.89,999 இல் தொடங்குகிறது.

Acer Swift 3 (SF314-511) என்ற அடுத்த  மாடல் Intel Core i5-1135G7 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 16GB ரேம் மற்றும் 512GB SSD இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த லேப்டாப் 14 இன்ச் முழு HD டிஸ்ப்ளே மற்றும் 1.2 கிலோ எடை கொண்டது. இந்தியாவில் Acer Swift 3 (SF314-511) விலை ரூ.60,990 இல் தொடங்குகிறது.

Acer Swift 3 லேப்டாப்பில் சில முக்கிய விவரக்குறிப்புகள் இதோ:

* ஆப்பரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 10 ஹோம்
* AMD Ryzen 5 5500U அல்லது Intel Core i5-1135G7 பிராஸசர்
* 8 ஜிபி அல்லது 16 ஜிபி ரேம்
* 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
* 14-இன்ச் முழு HD (1920×1080) IPS டிஸ்ப்ளே
* 12 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரி
* 1.25 கிலோ எடை

Acer Swift 3 லேப்டாப் ஒரு மெல்லிய மற்றும் இலகுரக லேப்டாப் ஆகும். இது கையடக்க மற்றும் சக்திவாய்ந்த லேப்டாப்பைத் தேடும் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பொருத்தமானது.

மேலும் உங்களுக்காக...