அதுமட்டுமா ஒரு துணை மின் நிலையத்தையே வித்துட்டாங்க… மத்திய அரசோடு மாநில அரசு கைகோர்த்திருந்தால் சோலார் எனர்ஜி சூப்பரா இந்நேரம் டெவலப் ஆகியிருக்கும்.. மக்களுக்கு நல்லதுன்னா திமுக செய்யாதே.. இப்ப தவெக அரசு இதை கையில் எடுத்திருக்கு.. இனிமேல் தமிழகம் மின்சார உற்பத்தியில் ஜொலிக்கும்…
தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சூரிய மின்சக்தி திட்டங்களில் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய சோலார் சங்கத்தின் தலைவர் சி. நரசிம்மன் இது குறித்து கூறுகையில், முந்தைய திமுக ஆட்சியின் முறைகேடுகள் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 4,000 மெகாவாட் அளவிலான சூரிய மின்சக்தி திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பசுமை ஆற்றல் துறையை வளர்க்க வேண்டிய முந்தைய அரசு, பல்வேறு ஊழல்களால் இந்த திட்டங்களின் வளர்ச்சியை முடக்கியுள்ளது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஊழல் புகார்களில் குறிப்பாக விருதுநகர் மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. விருதுநகரில் மட்டும் சுமார் 1,750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்காக அமைக்கப்படவிருந்த துணை மின் நிலையம், அப்போதைய திமுக அமைச்சர்களால் முழுமையாக விற்கப்பட்டதாக அதிர்ச்சிகரமான புகார்கள் எழுந்துள்ளன. இது போன்ற முறைகேடுகள் விருதுநகருடன் நின்றுவிடாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகித் துறைசார் வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே, மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தீவிர நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. முந்தைய ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட இந்த பழைய திட்டங்கள் அனைத்தையும் தவெக அரசு உடனடியாக நிறுத்தி வைத்துள்ளதுடன், இந்த முறைகேடுகளில் தொடர்புடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை பாய்ந்துள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பசுமை எரிசக்தித் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் எடுக்கப்பட்டதாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
முந்தைய அரசின் முறைகேடுகளால் முடக்கப்பட்டிருந்த சூரிய மின்சக்தித் திட்டங்களை மீட்கும் வகையில் தற்போது புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சூரிய மின்சார துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவரும் தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இனி ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்றும், அரசுத் தரப்பிலிருந்து உரிய அனுமதிகளை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒளிமயமான முறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க தவெக அரசு வழிவகுத்துள்ளது.
மத்திய அரசின் PM Rooftop Solar Scheme கீழ் இதுவரை தமிழகத்தில் 50,000 பேருக்கு குறைவானவர்களே பயனடைந்துள்ளனர் என்றும், மாநிலத்தில் சுமார் 1,000 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.78,000 மானியம் வழங்கும் நிலையில், தமிழக அரசு தனது சமீபத்திய பட்ஜெட்டில் கூடுதலாக ஒரு லட்சம் இணைப்புகளுக்கு ரூ.22,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதை சோலார் சங்கம் வரவேற்றுள்ளது. நாடு முழுவதும் 60 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
சூரிய மின்சக்தி உற்பத்திக்கான சோலார் செல் தயாரிப்பில் நாட்டில் உள்நாட்டு தயாரிப்புத் திறன் 65 ஜிகாவாட்டாக உள்ளதாகவும், சோலார் மாடியூல் தயாரிப்புத் திறன் 161 ஜிகாவாட்டாக இருப்பதாகவும் துறைசார் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மாடியூல் தயாரிப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தித் திறன் அதிகரிக்கும் வரை சோலார் செல்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர். தவெக அரசு ஊழல்களை முற்றிலுமாக ஒழித்து, மக்களின் மின்சாரத் தேவையை வைத்து அரசியல் செய்யாமல், மாநிலத்தைச் சூரிய சக்தி உற்பத்தியில் முன்னோக்கி அழைத்துச் செல்லும் உறுதியான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
