இக்கரைக்கு அக்கரை பச்சை.. அமெரிக்கா வேண்டவே வேண்டாம்.. இந்தியா தான் பெஸ்ட்.. அமெரிக்க பெண்ணின் நெகிழ்ச்சியான வீடியோ..!

  இன்றைய காலகட்டத்தில், பல இந்தியர்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர், சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் தரமான வாழ்க்கைக்காக அமெரிக்காவுக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு அமெரிக்க பெண் தான்…

america

 

இன்றைய காலகட்டத்தில், பல இந்தியர்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர், சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் தரமான வாழ்க்கைக்காக அமெரிக்காவுக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு அமெரிக்க பெண் தான் இந்தியாவில் வாழ்வதை விரும்புவதாக கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிறிஸ்டன் ஃபிஷர் என்ற அந்தப் பெண், தனது கணவர் டிம் மற்றும் மூன்று மகள்களுடன், அமெரிக்காவில் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்தோம். அந்த வாழ்க்கையை விட்டுவிட்டு, 2021-ல் இந்தியாவுக்குக் குடியேறினோம். நான்கு வருடங்கள் கடந்த நிலையில், எந்தவித வருத்தமும் இல்லை என்றும், இந்தியாவின் மீதான நன்றியே மிஞ்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டன் ஃபிஷர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில், இந்தியாவுக்கு வந்த பிறகு நான் சில அற்புதமான மனிதர்களை சந்தித்தேன், நம்பமுடியாத இடங்களுக்கு சென்றேன், சுவையான உணவுகளை சாப்பிட்டேன். என் இதயம் நிரந்தரமாகவே மாறிவிட்டது. இந்தியா என் வாழ்க்கையை என்றென்றும் மாற்றியிருக்கிறது, நான் ஒருபோதும் முன்பு போல இருக்க மாட்டேன். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்; அதை இனிமேல் இந்தியாவில் தான் வாழ போகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சிலர் பொறாமைப்படுவதாகவும், சிலர் தாங்களும் இந்தியாவுக்கு வர ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். ஐரோப்பாவில் வாழும் ஒரு இந்தியர், “நான் என் இந்தியாவை மிகவும் இழக்கிறேன். ஆனால், அதிகமான வெளிநாட்டவர்கள் என் நாட்டை பாராட்டுவதையும் நேசிப்பதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தியாவுக்கு அவர்கள் குடியேறியது வெறும் உணர்வுபூர்வமான முடிவு மட்டுமல்ல; அது நிதி ரீதியாகவும் லாபகரமானது. கிறிஸ்டன் ஃபிஷர் மற்றொரு வீடியோவில், தாங்கள் ஒரு இணைய மேம்பாட்டு வணிகத்தை நடத்துவதாகவும், அது பெரும்பாலும் மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதாகவும் வெளிப்படுத்தினார். அமெரிக்க டாலர்களில் சம்பாதித்து, இந்தியாவில் வாழ்க்கை செலவு குறைவாக இருப்பதால், தங்கள் வருமானத்தை இந்திய ரூபாயில் செலவு செய்ய முடிவது அவர்களுக்கு ஒரு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.