மீண்டும் உருவான அதிதீவிர புயல் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!

By Velmurugan

Published:

தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. தென்கிழக்கு கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக அரபிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு திசையில் நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது.

இந்த புயலுக்கு பிபோர் ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் மொழியில் இதற்க்கு ஆபத்து என்பது பொருளாகும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் பிபோர் ஜாய் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக கேரளா முதல் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் அரபிக் கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாநிலத்தின் உட்பகுதிகளில் சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும் என எச்சரித்துள்ளது.

பைக் வைத்திருப்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி 3 பேர் வரை போகலாம்!

பெரும்பாலான இடங்களில் 100 டிகிரி ஃபாரன் வீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரண்டு முதல் நான்கு செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.