இந்தியாவில் இம்மாதம் வெளியாகும் Itel S23 ஸ்மார்ட்போன்.. ரூ.8000 விலையில் இவ்வளவு சிறப்பா?

உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகச்சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களை குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இம்மாதம் Itel S23 என்ற புதிய வகை ஸ்மார்ட் போன் வெளியிடவுள்ள நிலையில் ரூ.8000 விலையில் மிகச் சிறந்த அம்சங்கள் கொண்ட இந்த போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Itel S23 இந்தியாவில் இம்மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த போன் ரூ. ரூ. 8,000 மற்றும் ரூ. 8,999 என்ற விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு மற்றும் கோல்ட் என இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளியாகவுள்ளது.

Itel S23 ஸ்மார்ட்போன் octa-core Unisoc SC9863A பிராஸசர் மூலம் இயங்கும். 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதில் 90Hz அம்சங்களுடன், 6.6-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமராவும், செல்பிக்க்கு 8 மெகாபிக்சல் முன்கேமிராவும் உள்ளது.

Itel S23 ஸ்மார்ட்போன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மை கொண்ட 5000mAh பேட்டரி உள்ளது. மேலும் இது Android 12 Go பதிப்பில் இயங்குவதோடு, ல் கைரேகை சென்சார் வசதியையும் கொண்டுள்ளது.

Itel S23 இன் சில முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே:

* 6.6-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே
* யுனிசாக் SC9863A பிராஸசர்
* 8 ஜிபி ரேம்
* 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு
* 8 மெகாபிக்சல் செல்பி கேமிரா
* 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பு ஓஎஸ்
* கைரேகை சென்சார்

Itel S23 பட்ஜெட்டிற்கு ஏற்ற ஒரு நல்ல ஸ்மார்ட்போன் ஆகும். பெரிய டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பிராஸசர், நீண்ட கால பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் என பல சிறப்பு அம்சங்களிஅ கொண்டுள்ளது.