5ஜி சந்தையில் இந்தியா தான் கிங்.. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது..!

Published:

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவில் 5ஜி பயன்படுத்தும் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் 5ஜி மொபைல் சந்தையில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் சீனா வழக்கம் போல் முதலிடத்தில் தக்க வைத்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது மூன்றாவது இடத்திற்கு பின் தங்கி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக 5ஜி மொபைல் போன் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இந்திய சந்தையில் அனைத்து முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் 5ஜி மொபைல்போனை இந்தியாவில் இறக்கி வருகின்றன. குறிப்பாக பட்ஜெட் விலையில் கூட ஷாவ்மி, விவோ, சாம்சங் ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்கள் வருகை அதிகரித்துள்ளது

இந்தியாவை அடுத்து மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளிலும் 5ஜி மொபைல் போன் ஏற்றுமதி வளர்ச்சி கண்டு உள்ளன என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மிக வேகமாக 5ஜி மொபைல் விற்பனை செய்து வருவதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியா, சீனாவையும் பின்னுக்கு தள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...