அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஒரு பக்கம் வெளியேற்றி கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கோல்ட் கார்டு விற்பனை தீவிரமாக வளர்ந்து வருகிறது. இந்த கோல்ட் கார்டை ஐந்து மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் இந்த அறிவிப்பை கிண்டல் செய்துள்ளனர்.
“5 மில்லியன் டாலர்கள் இருந்தால் நான் இந்தியாவில் மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்வேன். மூன்று படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, வேலையாட்களை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வேன். நான் ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும்?” என்று ஒருவர் பதிவு செய்துள்ளார்.
இன்னொருவர், “5 மில்லியன் டாலரை நான் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்து, அதில் வரும் வட்டியால் சொகுசாக வாழ்வேன். நான் எதற்காக ஐந்து மில்லியன் டாலரை அமெரிக்க அரசுக்கு கொடுத்து அங்கு செல்ல வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது போன்ற பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் சிலர், “அமெரிக்க வாழ்க்கையை அனுபவிக்க 5 மில்லியன் டாலர் தாராளமாக கொடுக்கலாம்” என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த அறிவிப்புக்கு உலக நாடுகளில் இருந்து பெரும் எதிர்ப்புதான் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.