40 வயது வரை உழைத்தால் போதும்.. அதன்பின் வாழ்க்கை ஜாலி தான்: SWP செய்யும் மாயாஜாலம்..!

By Bala Siva

Published:

ஒருவர் 25 வயதில் வேலை பார்க்க ஆரம்பித்து அதன் பின்னர் தனக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை SIP மூலம் சேமித்துக் கொண்டு வந்தால், அவரது 40 வயதில் அவரிடம் குறைந்தது ஒரு கோடி இருக்கும் என்றும் அதன் பின் SWP முறையில் அவர் தனது வாழ்க்கையை ஜாலியாகக் கழிக்கலாம் என்றும் பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

வாழ்க்கையில் 40 வயதிற்கு மேல் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், 25 வயது முதல் கஷ்டப்பட்டு உழைத்து, பணத்தை சேமிக்க வேண்டும். பைக், கார், வீடு, சுற்றுலா என ஆடம்பர செலவு செய்யாமல், ஒருவர் 25 வயதில் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறார் என்றால், அதில் 25 ஆயிரம் SIPமூலம் சேமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் 15 ஆண்டுகள் குடும்பத்தையும் கவனித்து சேமிப்பையும் தொடர்ந்து வந்தால், அவர் 40 வயதிற்கு மேல் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதன்பின், அவர் தனது வாழ்நாள் முழுவதும் குடும்பத்தினருக்கும் ஜாலியாக பொழுதை கழிக்கலாம். 25 வயதில் ஆரம்பித்த SIPபணம், அவரது நாற்பதாவது வயதில் கண்டிப்பாக ஒரு கோடி ரூபாயாக மாறி இருக்கும்.

அதன் பின், அதனை SWP முறையில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் அவருக்கு சுமார் ஒன்றேகால் லட்சம் கிடைக்க வேண்டும். அந்த பணத்தை வைத்துக்கொண்டு, அவர் குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு, சுற்றுலா என ஜாலியாக இருக்கலாம் என்றும் பொருளாதார அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே, இளவயதில் சில தியாகங்களை செய்து சேமித்து வைத்தால், 40 வயதுக்கு மேல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.