இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய புதுப்புது திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் 4 சிம்கள், இலவச டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் வசதியுடன் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் உட்பட பல ஓடிடிகளும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிளான்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
ரூ.1399 போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டம்: 4 சிம் கார்டுகள் வருகிறது. இது ஒரு குடும்ப திட்டம். முதன்மை சிம்முக்கு 150 ஜிபி டேட்டா தரவு, 100 எஸ்.எம்.எஸ் தினமும் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் சிம்களுக்கு, ஒவ்வொன்றிற்கும் 30 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் ஓடிடி சாதகங்களில் ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக், அமேசான் ப்ரைம் மொபைல் 6 மாத கால சலுகையும், ஜியோ ஹாட்ஸ்டார் ஒரு ஆண்டு சலுகையும் கிடைக்கும்.
ரூ.1749 போஸ்ட்பெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் 5 சிம்கார்ட்களுடன் வருகிறது. முதன்மை சிம்முக்கு 200 ஜிபி டேட்டா வழங்கப்படும், மேலும் கூடுதல் சிம்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 30 ஜிபி டேட்டா கிடைக்கும். பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ் தினமும் பெறலாம்.
OTT சாதகங்களில் 6 மாதங்களுக்கு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மொபைல் கிடைக்கும், அதேபோல் (6 மாதங்கள்), ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக், மற்றும் ஒரு வருடத்திற்கு ஜியோ ஹாட்ஸ்டார் கிடைக்கும்,