35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜிஎஸ்டி வரி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சில பொருட்களுக்கு…

gst
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜிஎஸ்டி வரி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சில பொருட்களுக்கு 35 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் அவை வரவேற்றது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி என்ற வகையை நீக்கிவிட்டு, நுகர்வோர் பொருட்களுக்கான வரியை மட்டுமே முன்னெடுக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. 140 கோடி பேர் இருக்கும் நாட்டில் வெறும் 2 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள் என்ற நிலையில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வரி செலுத்தாமல் தப்பித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக இது ஒரு நடவடிக்கையாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சிகரெட், புகையிலை, கார்பனேட் குளிர்பானங்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு ஜிஎஸ்டி இதுவரை 28% இருந்த நிலையில், தற்போது அதை 35 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பரிந்துரைக்கு பொதுமக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. “சிகரெட் போன்ற பாவப்பட்ட பொருட்களுக்கு 35 சதவீதம் அல்ல, 100% கூட வரி போடுங்கள்,” என்று சிலர் கூறுகின்றனர். உடல் நலம் மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் பாதிக்கும் இவை போன்ற நச்சுப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதே ஒரே வழி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள், அதிக வரி காரணமாக சிகரெட் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும், ஆரோக்கியம் மேம்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான சைக்கிள்கள், மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் தரும் பொருட்களுக்கு வரி குறைத்து, உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதகமான பொருட்களுக்கு அதிக வரி விதித்தது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.