கூகுள் குரோம் பிரெளசரில் 32 அபாயமான எக்ஸ்டென்ஷன்கள்.. உடனே டெலிட் செய்ய அறிவுறுத்தல்..!

By Bala Siva

Published:

உலகின் முன்னணி பிரவுசர்களில் ஒன்றான கூகுள் குரோம் பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும் அதில் உள்ள 32 எக்ஸ்டென்ஷன்கள் அபாயமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உடனடியாக டெலிட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூகுள் குரோம் என்பது உலகின் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசர் என்பதும் இந்த பிரவுசர் தான் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருப்பதாகவும் பொதுவாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் குரோமில் உள்ள எக்ஸ்டென்ஷன் என்ற வசதி பல்வேறு பயனாளர்களால் பயன்படுத்த வரும் நிலையில் தற்போது இதிலும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்டென்ஸ்களை 75 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ள நிலையில் தற்போது அபாயகரமான 32 எக்ஸ்டென்ஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நீங்கள் இணையதளங்களில் பார்வையிடும் போது அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் மேலும் உங்கள் கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் உடனே அவற்றை நீக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபாயகரமானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில எக்ஸ்டென்ஷன்கள் :

* யூடியூப்பிற்கான ஆட்டோஸ்கிப்
* சவுண்ட்பூஸ்ட்
* கிரிஸ்டல் விளம்பரத் தொகுதி
* விறுவிறுப்பான VPN
* கிளிப்போர்டு உதவியாளர்
* Maxi Refresher
* PDF கருவிப்பெட்டி
* வீடியோ பதிவிறக்க உதவியாளர்
* Adblock Plus
* Adblock அல்டிமேட்

இந்த எக்ஸ்டென்ஷன்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். Chromeஐ ஓபன் செய்து chrome://extensions சென்று மேற்கண்ட எக்ஸ்டென்ஷன்கள் இருந்தால் அதை தேர்வு செய்து டெலிட் என்பதை கிளிக் செய்யவும்.

குரோம் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருப்பதற்கான சில குறிப்புகள் இதோ:

* நம்பகமான டெவலப்பர்களிடமிருந்து வரும் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கவும்.
* எக்ஸ்டென்ஷன்கள் டவுன்லோடு செய்யும் முன் மதிப்புரைகளைப் படிக்கவும்.
* எக்ஸ்டென்ஷன்கள் கோரும் அனுமதிகளுக்கு கவனம் செலுத்துங்கள்.
* உங்கள் எக்ஸ்டென்ஷன்களை புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.
* தீங்கிழைக்கும் விளம்பரங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களைத் தடுக்க uBlock Origin போன்ற பாதுகாப்பு நீட்டிப்பைப் பயன்படுத்தவும்.