அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த கூடுதல் வரிவிதிப்பு உள்பட சில காரணங்களால் அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இந்திய IT துறைக்கும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த கடுமையான வரி உயர்வுகள் குறித்து தற்போது பயம் உண்மையாக உள்ளது. அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரி உயர்வுகள், பல நாடுகளின் பொருளாதாரத்தையும் தொழில் துறையையும் அதிரடியாக பாதிக்கத் தொடங்கியுள்ளன.
2025ம் ஆண்டு இதுவரை, சுமார் 100 நிறுவனங்களில் 27,762 பேர் IT துறையில் வேலை இழந்துள்ளனர். இவை மறுசீரமைப்பு, ஏ.ஐ. மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களின் தாக்க, நிறுவனங்கள் மூடுதல், கடுமையான போட்டி மற்றும் சர்வதேச பொருளாதார அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளன.
WordPress-ஐ உருவாக்கிய Automattic, ட்விட்டர் துணை நிறுவனர் ஜாக் டோர்சியின் Block, தொழில்துறை நெடுந்தலைவர் Siemens ஆகியோர் சமீபத்தில் பெரிய அளவில் பணியாளர்களை நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
Automattic – 280 பணியாளர்கள்
Block – 931 பேர்
Northvolt (சுவீடனின் பேட்டரி நிறுவனம்) – 2,800 பேர்
Canva – 10 பேர்
Siemens – 5,600 பேர்
இவற்றுடன், Palantir, Brightcove, HelloFresh போன்ற நிறுவனங்களும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை நீக்கியுள்ளன.
டிரம்ப் விதித்த 26% வரி உயர்வு காரணமாக, இந்திய நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கும் என கணிக்கப்படுகிறது. இது IT தொழில்துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு இழப்பாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய அரசு, வரி குறைப்பை பற்றிய பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பேச்சுவார்த்தையில் சாதகமான சூழல் உருவானால் IT துறை தப்பிக்கும், இல்லையேல் பெரும் ஆபத்து தான்.