உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் காலையில் பிரேயருக்காக நின்று கொண்டிருந்த மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்ததாகவும் மொத்தம் 23 மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்டா என்ற மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்து வரும் நிலையில் அங்கு காலையில் பள்ளி பிரேயருக்காக மாணவர்கள் வரிசையாக நிற்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பிரேயர் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெப்ப அலை தாங்காமல் மயக்கம் போட்டு விழுந்ததாகவும், இதனை அடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.
மருத்துவர்கள் அந்த மாணவர்களை பரிசோதனை செய்து வெப்ப அலைகள் அவர்கள் சுவாசித்ததால் தான் மயக்கம் வந்திருக்கலாம் என்று கூறியதோடு உடனடியாக சிகிச்சை ஆரம்பித்தனர். மயக்கம் போட்டு விழுந்த மாணவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு படித்து வருவதாகவும் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு விட்டார்கள் என்றும் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
காலையில் பள்ளி பிரேயரின் போது அடுத்தடுத்து 23 மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
