18 வருடமாக பேச முடியாத பெண்ணை பேச வைத்த AI.. மனதில் நினைப்பதை குரலாக மாற்றும் அதிசயம்..!

  18 வருடமாக பேச முடியாத ஒரு பெண் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேசியிருப்பதாகவும், மனதில் நினைப்பதை குரலாக மாற்றும் மாயாஜால கண்டுபிடிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 47 வயது பெண்…

speak.jpg

 

18 வருடமாக பேச முடியாத ஒரு பெண் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேசியிருப்பதாகவும், மனதில் நினைப்பதை குரலாக மாற்றும் மாயாஜால கண்டுபிடிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

47 வயது பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் காயமடைந்ததால், அவர் பேசும் திறனை இழந்தார். இதனை அடுத்து, அவர் 18 ஆண்டுகளாக பேசாமல் இருந்த நிலையில், தற்போது மூளை மற்றும் கணினி இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தி, பேச முடியாதவர்களுக்கு குரல் அளிக்கலாம் என்ற புதிய அம்சம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அந்த பெண்ணில் சோதனை செய்து பார்த்தனர்.

“நேச்சர் நியூரோசயின்ஸ்” என்ற பத்திரிகையில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி, அவரது மூளையில் பொருத்தப்பட்ட ஒரு கருவியும், கணினியில் உள்ள கருவியும் இணைக்கப்பட்டு, அவர் மனதில் என்ன பேச விரும்புகிறாரோ, அதை சரளமான வாக்கியங்களாக மாற்றுகிறது.

“இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று, இந்த கண்டுபிடிப்பின் நிபுணரான கான்சாஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் தெரிவித்தார். மேலும், “இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது” என்றும் அவர் கூறினார்.

அந்த பெண்மணியின் மூளைச் செயல்பாடுகளை எலக்ட்ரோட்கள் (Electrodes) மூலம் பதிவு செய்து, அவர் மனதில் நினைக்கும் வார்த்தைகளை குரலாக மாற்றியுள்ளோம். இதற்காக, விபத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அவரது குரலை பயன்படுத்தியுள்ளோம்.

நரம்பியல் செயல்பாடுகளை ஒலிகளாக மாற்றக்கூடிய AI தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியமாகியிருக்கிறது.

அந்த பெண் மனதில் என்ன நினைக்கிறாரோ, அதை சில மைக்ரோவிநாடிகளில் மூளை குரலாக மாற்றுகிறது. மேலும், ஒவ்வொரு வார்த்தையையும் உடனுக்குடன் குரலாக மாற்றி, அவர் இயல்பாக பேசும் வகையில் செய்கிறது.

அடுத்த பத்து ஆண்டுகளில், இது உலகம் முழுவதும் மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய பயன்பாட்டைக் கொடுக்கும் என்றும், இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.