17 மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத சிறுவனை குணப்படுத்திய ChatGPT.. ஒரு மருத்துவ அதிசயம்..!

  4 வயது சிறுவன் ஒருவரின் மர்மமான நோய்க்கு அவரது தாயார் 17 மருத்துவர்களிடம் மாறி மாறி காண்பித்த நிலையில் குணமாகாத மகனுக்கு ChatGPT மூலம் சரியான நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றதால் குணமான…

chatgpt

 

4 வயது சிறுவன் ஒருவரின் மர்மமான நோய்க்கு அவரது தாயார் 17 மருத்துவர்களிடம் மாறி மாறி காண்பித்த நிலையில் குணமாகாத மகனுக்கு ChatGPT மூலம் சரியான நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றதால் குணமான அதிசயம் ஆச்சரியத்தை அளிக்கிறது.

அலெக்ஸ் என்ற சிறுவன், கொரோனா தாக்குதலுக்கு பின் பல் வலி, வளர்ச்சி குறைவு, சமநிலை இழப்பு போன்ற அசாதாரண அறிகுறிகளை கொண்டிருந்தான். அவனது தாய் கோர்ட்னி, 17 மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றாலும், ஒருவரும் சரியான நோயினை கண்டறிய முடியவில்லை.

அலெக்ஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைய தொடங்கிய போது, கோர்ட்னி, வழக்கத்திற்கு மாறாக ஒரு தீர்வை நாடினார். அதுதான் ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு மொழி முறை. அவர் அலெக்ஸின் அறிகுறிகள் மற்றும் MRI ஸ்கேன் முடிவுகளை ஒவ்வொன்றாக அந்த சிஸ்டத்தில் பதிவு செய்தார்.
சில நொடிகளில் ChatGPT ஒரு அதிர்ச்சியான ஆனால் தெளிவான சாத்தியக்கூறை வழங்கியது. அந்த சிறுவனுக்கு Tethered Cord Syndrome எனும் அரிய நரம்பியல் கோளாறு இருப்பதாகவும், இதில் நரம்புக் கழிவுகள் திசுக்களில் மாட்டிக் கொண்டு முதுகுநரம்பின் இயக்கத்தை தடுக்கும் நோய் என்றும் கூறியது.

இந்த தகவலுடன், கோர்ட்னி ஆன்லைன் மூலம் இதேபோன்ற அறிகுறிகள் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்கள் பின்பற்றிய சிகிச்சையை தெரிந்து கொண்டார். பின்னர் ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், அந்த நோயைக் உறுதிசெய்தார். அலெக்ஸ் என்ற சிறுவனுக்கு அதன்பின் முதுகு நரம்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் , இப்போது படிப்படியாக பூரண குணமாகி வருகிறார்.

17 மருத்துவர்கள் முயற்சி செய்தபோதும், மருத்துவர்கள் அந்த நோயை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், பெரும் அளவிலான தரவுகளால் பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு, ஒரு முக்கியமான மர்ம முடிச்சை அவிழ்த்தது.

இந்த நிகழ்வு, நவீன தொழில்நுட்பமும் மனித உறுதியும் இணைந்தால் என்ன வகை மகத்தான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கிறது.