மோடி – ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துகிறாரா மோடி? டிரம்புக்கு எகிறும் ரத்தக்கொதிப்பு.. நோபல் பரிசு போச்சா?

உக்ரைன் நெருக்கடி குறித்து சர்வதேச அளவில் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மோடி…

modi

உக்ரைன் நெருக்கடி குறித்து சர்வதேச அளவில் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேசிய நிலையில் இன்று அவர் உக்ரைன் அதிபரிடமும் பேசியிருப்பதை அடுத்து இந்த இரண்டு உரையாடல்கள் இருதரப்பு மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி வலியுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் அறிக்கை ஒன்றில், “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி தெரிவித்த பிரதமர், மோதலை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான இந்தியாவின் நிலையான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே இன்னும் இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில் இந்தியாவின் அமைதி முயற்சிகளுக்கு உக்ரைன் அதிபர் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இந்தியா உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, உக்ரைன் தொடர்பான அமைதிக்கு சாத்தியமான அனைத்து பங்களிப்புகளையும் செய்ய உறுதிபூண்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு ஜெலென்ஸ்கி தெரிவித்ததாகவும், “இந்தியா எங்கள் அமைதி முயற்சிகளை ஆதரிப்பதற்கு நன்றி என்றும், விரைவில் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

https://x.com/ZelenskyyUa/status/1954891726134378999