isha

இன்று மகாசிவராத்திரி…! விரதத்தால் நமக்கு இத்தனை நன்மைகளா?

இன்று (15.2.2026) மகாசிவராத்திரி. விரதத்தை மேற்கொள்கிற போது நம் மனதில் உள்ள ஆணவத்தை இறைவன் எரித்து சாம்பல் ஆக்குகிற காலம் தான் சிவராத்திரி. எது செய்தாலும் ஆணவம் வருகிறது. பக்தியில் கூட நான் இதை…

இன்று (15.2.2026) மகாசிவராத்திரி. விரதத்தை மேற்கொள்கிற போது நம் மனதில் உள்ள ஆணவத்தை இறைவன் எரித்து சாம்பல் ஆக்குகிற காலம் தான் சிவராத்திரி. எது செய்தாலும் ஆணவம் வருகிறது. பக்தியில் கூட நான் இதை சிவனுக்கு செய்தேன் என்கிறார்கள்.

இது எவ்வளவு பெரிய தவறு. நம்மை இறைவன் கொடுக்கிற நிலையில் வைத்துள்ளார். இதற்கு நாம் தவம் செய்ய வேண்டும் என்ற பணிவான எண்ணத்துடன்தான் இறைவனை நெருங்க முடியும்.

என்னை விட எதுவும் பெரிசு கிடையாதுன்னு நினைக்கிற ஆணவத்தை இறைவன் எரித்து சாம்பல் ஆக்குகிறார். இந்த சிவராத்திரியில் எப்படி அடி முடி காணாது இருந்தவர்களுக்கு இறைவன் ஆணவத்தை நீக்கி ஜோதி பிழம்பாகக் காட்சி தந்தாரோ அப்படி நம்முடைய ஆன்மாவைத் தூய்மையாக்கி அதற்குள் இறைவன் ஜோதி சொரூபமாகக் காட்சி தருவார்.

இறைவனை வெளியே பார்க்குறது வழிபாடு அல்ல. இறைவனை உள்ளுக்குள் தேடி செய்யக்கூடியது தான் வழிபாடு. அதனால்தான் இந்த சிவராத்திரியில் விரதம் இருக்கிறவர்கள் தியானத்தைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவும் அந்த 3ம் காலத்தில் நாம் செய்யக்கூடிய தியானம் அவ்வளவு வலிமையானது.

அதை நாம் செய்ய செய்ய நம் ஆன்ம நலன் அதிகரிக்கும். எல்லா வகையான நலன்களும் நமக்கு இந்த சிவராத்திரி விரதத்துல கிடைக்கும். சிவராத்திரியில் குலதெய்வ வழிபாடும் உண்டு. குலதெய்வ கோவிலில் சிவன் இல்லை என்றும் அம்பாளைத் தான் வழிபடுவோம் என்பவர்கள் வீட்டிலேயே சிவ வழிபாட்டை முடித்து விட்டுச் செல்லலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.