மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி ரூல்ஸ் போட்ட தமிழ்நாடு அரசு..இனி ஹாஸ்பிட்டல இதெல்லாம் கட்டாயம்..

கொல்கத்தாவில் பிரபலமான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கேட்டு நாடு முழுக்க மருத்துவர்கள் பல்வேறு…

Kolkatta

கொல்கத்தாவில் பிரபலமான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கேட்டு நாடு முழுக்க மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு இச்சம்பவம் பெரிய பின்னடைவைக் கொடுத்திருக்கிறது. ஒரு பெண் ஆளும் இந்த மாநிலத்திலேயே பெண்களுக்குப் பாதுக்காப்பு இல்லை எனக் கூறி போராட்டங்கள் வெடித்தன. தற்போது விசாரணை செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு இல்ல.. இந்து விரோத மாநாடு.. ஹெச். ராஜா காட்டம்

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் காவல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுக்க சிசிடிவி பொருத்த வேண்டும். மருத்துவமனைகளில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட வேண்டும்.

இரவு நேரங்களில் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய மருத்துவமனையைச் சுற்றிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதாகைகளை வைக்க வேண்டும் என்பது போன்ற பல நடவடிக்கைகளை எடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.