என்ன? முகம் நன்கு பளபளக்க இவற்றை செய்தால் மட்டும் போதுமா? முகத்தை பொலிவு பெறச் செய்யும் யோகாசனங்கள்…!

By Sowmiya

Published:

நம் அனைவருக்கும் நம் முகம் மாசு, மரு, கரும்புள்ளிகள், முகப்பருக்கள், கருமை படிதல் இந்த பிரச்சனைகள் இல்லாமல் பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.

இதற்காக அழகு சிகிச்சை, ஃபேஷியல் என்று செய்வது ஒரு புறம் இருக்க இவை ஏதும் இல்லாமல் நமது உடலையும் மனதையும் சீராக வைத்துக் கொள்வதன் மூலம் நம் முகத்தையும் நாம் பளபளப்பாக தோற்றமளிக்க செய்யலாம். அதற்கு மிகச் சிறந்த ஒரு பயிற்சி தான் யோகாசனம்.

யோகாசனம் நமது உடல் நலன் மற்றும் மன நலனை சீராக வைத்துக் கொள்ள உதவும் அறிவியல் மற்றும் வாழ்க்கை நெறி கலந்த பயிற்சி முறை. இந்த யோகா மனதை ஒருநிலைப்படுத்தி நமது கவனச் சிதறலை தவிர்த்து விடும் ஒரு அற்புத மருந்தாகும்.

அனைத்து வயதினருக்கும் இந்த காலத்தில் மன அழுத்தம் என்பது பொதுவாகிப்போன ஒன்றாகிவிட்டது. அந்த மன அழுத்தத்தை போக்க உதவும் மிகச்சிறந்த பயிற்சிதான் யோகாசனம். இந்த யோகாசனத்தில் பல ஆசன நிலைகள் உள்ளன அவற்றில் நமது சரும பளபளப்பிற்கான ஆசன நிலைகள் சிலவற்றை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

தனுராசனம்

dhanurasana

 

இந்த ஆசனம் முகம் மற்றும் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. செரிமான ஆற்றலை அதிகரித்து குடல் பிரச்சனையை சரி செய்கிறது. மலச்சிக்கல் தொந்தரவிற்கு மிகச் சிறந்த ஆசனம். முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதாலும் குடல் சுத்தம் செய்யப்படுவதாலும் இந்த ஆசனத்தினால் முகம் மாசு மருவின்றி பிரகாசிக்கிறது.

பட்சி மோத்தாசனம்

patchi moththasana

முகத்தில் உண்டாக கூடிய பருக்கள் போன்ற பல சரும பிரச்சனைகளுக்கு எளிய தீர்வாக அமையக்கூடிய ஆசனம். இந்த ஆசனம் மன அழுத்தத்தை குறைத்திட உதவும். நம் உடலில் உள்ள ரத்தத்தை தூய்மைப்படுத்துவதால் சருமத்தின் நிறத்தை அதிகரித்திடும். மேலும் முகத்தில் உண்டாக கூடிய கரும்புள்ளிகளை நீக்கி வயது முதிர்வால் ஏற்படும் சுருக்கங்களை குறைத்திடவும் உதவுகிறது இந்த பட்சி மோத்தாசனம்.

அதோ முக சுவனாசனா

adho mugaswasana

நம்முடைய மூளை மற்றும் முகத்திற்கு இரத்த ஓட்டத்தை கொண்டு வரக்கூடிய யோகாசனம் இது. இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதால் முழு உடலையும் உற்சாகத்துடன் வைத்திருக்க முடியும். முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஆரோக்கியமான சிவந்த கன்னங்களை இந்த யோகாசனம் வழங்குகிறது.

மச்சாசனம்

machiyasana

மீன் போன்ற அமைப்பை உடைய ஆசன நிலை‌ தான் மச்சாசனம். மிகவும் எளிமையான யோகாசனம் ஆகும். தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தில் ஏற்படும் பல்வேறு நிற வேறுபாட்டை சரி செய்து உதவுகிறது இந்த மச்சாசனம்.