குடும்பம் நல்லாருக்கணுமா..? மனைவிமாரே மறந்தும் கூட கணவரிடம் இதைச் சொல்லி விடாதீர்…!

மனைவி என்பவள் கணவரில் சரிபாதி. அதே போல் கணவர் மனைவியில் சரிபாதி. ஒரு குடும்பம்னு இருந்தா ஒரு தலைவனும், தலைவியும் இணைந்து அதை வழிநடத்தினால் தான் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.…

மனைவி என்பவள் கணவரில் சரிபாதி. அதே போல் கணவர் மனைவியில் சரிபாதி. ஒரு குடும்பம்னு இருந்தா ஒரு தலைவனும், தலைவியும் இணைந்து அதை வழிநடத்தினால் தான் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். அதுதான் குடும்பத்திற்கு முன்னேற்றம் தரும். ஒருவருக்கொருவர் ஈகோ இருக்கக்கூடாது. எந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும்?

எதைச் சொல்லக்கூடாது என்று இருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் சொல்ல வேண்டிய விஷயத்தை மறைக்கக்கூடாது. இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கே திருமணமாகி பல மாதங்கள் ஆகிவிடும்.

காதலிக்கும்போது இருக்கும் அன்பு, பாசம் எல்லாம் திருமணத்திற்குப் பிறகு காணாமல் போய்விடும். ஒரு போதும் மனைவியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அதே போல கணவரையும் மனைவி எங்கும் விட்டுக் கொடுத்துப் பேசக்கூடாது. இது தான் எத்தகைய விரிசல், பிரச்சனை இருந்தாலும் குடும்பத்தை சேர்த்து வைக்கும். கோபத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசி விடக்கூடாது. முக்கியமாக கைகலப்பு வந்து விடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் மனைவவி தனது கணவரைப் பற்றி ஒரு போதும் சொல்லக்கூடாத அளவில் 5 முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை மட்டும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கடைபிடித்தால் போதும்.

குடும்பத்தில் எந்த சண்டை சச்சரவுகளும் வராது. வாங்க என்னன்னு பார்க்கலர். நீ எதுக்கும் பயன் இல்லை என்று மனைவி கணவரைப் பார்த்து கோபத்தில் கூட சொல்லி விடக்கூடாது. இது கணவரின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும். அவனை மாதிரி நீயும் இருக்க முடியாதான்னு கேட்டு விடாதீர்கள். கிராமத்தில் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரனுடன் தன் கணவரை அடிக்கடி இப்படி ஒப்பிட்டுப் பேசுவதுண்டு. இப்படி பேசுவது குடும்பத்தின் உறவைப் பாதிக்கும்.

நான் உன்னை திருமணம் செய்தது தவறுன்னு மறந்தும் சொல்லி விடாதீர்கள். இது உங்கள் கணவரின் மனதில் ஆழமான காயத்தை உண்டாக்கி விடும். அதே போல என் வீட்டு மக்கள் தான் முக்கியம்னு சொல்லாதீர்கள். இது குடும்ப சமநிலையை சீர்குலைக்கும். கணவர் வீட்டு உறவும் முக்கியம் தான் என்று சொல்லுங்கள்.

‘எவ்ளோ சொன்னாலும் நீ மாறவே மாட்டே. திருந்தாத ஜென்மம் நீ. குடிகாரனைக் கூட திருத்திடலாம். உன்னைத் திருத்த முடியாது’ன்னு வாய்க்கு வந்ததைப் படபடவென பேசி விடாதீர்கள். இது உங்கள் கணவரின் நம்பிக்கையை முற்றிலும் உடைக்கும். மொத்தத்தில் பெண்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. பேசும் வார்த்தைகளுக்கு காயப்படுத்தும் சக்தி அதிகம். அன்பாக பேசினால் தான் உறவு நீடிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.