இது நமக்கு தேவையா மேடம்?.. விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்ட ஜூலி..என்ன ஆச்சு?..

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற வார்த்தையை சொன்னதும் நமக்கு பல நிகழ்வுகள் ஞாபகம் வரலாம். அதே போல, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பற்றிய நிகழ்வுகளும் ஞாபகத்துக்கு…

Julie Vs TVK

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ன்ற வார்த்தையை சொன்னதும் நமக்கு பல நிகழ்வுகள் ஞாபகம் வரலாம். அதே போல, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பற்றிய நிகழ்வுகளும் ஞாபகத்துக்கு வரலாம். அதில் முக்கியமான ஒருவர் தான் ஜூலி. சாதாரண ஒரு செவிலியராக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலி, தொண்டை முழங்க அந்த போராட்டத்தில் ஈடுபட்டது பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

இதில் கிடைத்த புகழ் மூலம் பிக் பாஸ் முதல் சீசனிலேயே நுழைந்த ஜூலி, மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைய தொடங்கினார். இதன் பின்னர் டிவி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் தோன்றி ஜல்லிக்கட்டு போராட்டத்தையே மிகப்பெரிய திருப்புமுனையாக ஏற்படுத்திக் கொண்டவர், மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு நபராகவும் இருந்து வருகிறார்.

இதற்கு மத்தியில் தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஜூலி செய்து வரும் ஒரு செயலால் அவர் மீது விஜய் ரசிகர்களும், தவெ தொண்டர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தனது பதிவுகளை வெளியிட்டு வரும் ஜூலி, இன்னொரு புறம் விஜய்யையும், அவரது கட்சி தொண்டர்களை தாக்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

விஜய்க்கு அரசியல் தெரியாது என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ல்கர் வாரியர்ஸ் ன்றும் குறிப்பிட்டு பெண்களுக்கு அவர்களால் பாதுகாப்பு இல்லை என்ற விமர்சனத்தையும் மிக ஆணித்தரமாக வைத்து வருகிறார் ஜூலி. இதுவே விஜய் பக்கம் நிற்கும் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியாக அமைய ஜூலியின் பதிவுகள் மீது தகாத வார்த்தைகளையும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனாலும் துவண்டு போகாத ஜூலி, விஜய் மற்றும் அவர் கட்சியின் மீது தொடர்ந்து தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் தனது ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடங்கிய மெரினா பீச் அருகே சென்று ஒரு கையில் ஸ்டாலின் அரசு மீண்டும் வரவேண்டும் என்ற பதாகையையும், இன்னொரு கையில் விஜய் ரசிகர்களை எதிர்த்த ஒரு பதாகையையும் ஜூலி ஒன்றை வைத்திருந்தார்.

இந்த சம்பவம் விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய அதே வேளையில் தான் மற்றொரு பரபரப்பு சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் எப்படி அனுமதியே இல்லாமல் ஒரு பொது இடத்தில் ஜூலி பிரச்சாரத்தில் ஈடுபட முடியும் என்றும் இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதி உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில் பொது இடத்தில் அதையும் மேற்கொண்டு ஜூலி தற்போது ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளதும் அதிகம் பேசுபொருளாக மாறி உள்ளது.