தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும் என்று சொல்வார்கள். அதே போல தானத்தில் சிறந்தது நிதானம் என்பர். அன்னதானத்தையும் சொல்வார்கள். ஒருவர் அன்னதானம் செய்யும்போது அவரது பித்ருக்கள் அனைவரும் மேல் உலகத்தில் பசியாறி மகிழ்வர்.
தான தர்மங்கள்; செய்யும்போது நம்ம வாழ்க்கையில் அனைத்து சவுகரியங்களும் கிடைக்கும். அதற்காக எல்லாம் ஒரு தானம் தானே என எந்தப் பொருளை வேண்டுமானாலும் தானம் செய்து விடக்கூடாது. தானத்திலும் ஒரு நிதானம் தேவை. அப்படின்னா என்னென்ன பொருள்களை நாம் தானம் செய்யக்கூடாது என்று பார்க்கலாமா…
நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் உள்ள சாமி படங்களை அடுத்தவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. புதிதாக வாங்கிக் கொடுக்கலாம்.
நம்ம வீட்டில் எரிந்து கொண்டு இருக்கும் விளக்கைக் கட்டாயம் பிறருக்கு தானம் செய்யக் கூடாது. அதே போல பூஜை சம்பந்தப்பட்ட எந்த பொருளையும் தானம் தரக்கூடாது.
ஏனென்றால் அந்தப் பொருள்களோடு சேர்த்து கடவுளும் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. நம்ம வீட்டில் கிழிந்த துணிகளை பிறருக்கு தானம் தரக்கூடாது.
துடைப்பத்தையும், மாப்பையும் கட்டாயம் பிறருக்குக் கடன் தரக்கூடாது. இது ஏன்னா இந்த மாதிரி பொருள்களை நாம் அடுத்தவருக்குக் கொடுக்கும் போது மகாலெட்சுமி நம் வீட்டை விட்டு போய் விடுவார்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் இந்த பொருள்களைக் கொடுக்கும் போது அவர்கள் வீட்டில் அதைப் பயன்படுத்தி விட்டு திருப்பித் தருகையில் அவர்கள் வீட்டில் உள்ள கெட்ட அதிர்வலைகள் நம் வீட்டிற்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய பொருள்களை கண்டிப்பாக அடுத்தவருக்குத் தானம் தரக்கூடாது. அது உடைந்து இருந்தாலும் போட்டு விட்டு புதிய பொருள்களைத் தான் வாங்க வேண்டும்.
அதே போல கண்ணாடி பொருள்களையும் தானம் தரக்கூடாது. நாம் சமையல் செய்த பொருள்கள் ஒரு சில நேரங்களில் மீதமாகி விடுவதுண்டு. அது நல்ல நிலையில் இருக்கும்போதே அடுத்தவர்களுக்குத் தானம் செய்து விட வேண்டும்.
கெட்டுப்போன உணவுப்பொருள்களை யாருக்கும் தானம் செய்யாதீர். இது பெரும் பாவத்தைத் தரும். அதே போல கூர்மையான பொருள்களைக் கட்டாயமாகத் தானம் செய்யக்கூடாது. கத்தி, அரிவாள், குண்டூசி, ஊசி, ஆணி போன்ற பொருள்களை யாருக்கும் தானம் செய்யக்கூடாது.