வாழ்க்கையில எல்லாருக்கும் நாம ஜெயிச்சிக்கிட்டே இருக்கணும்னு தான் ஆசை இருக்கும். யாராவது தோற்கணும். அதுவும் நல்லது தான். தோல்வி தான் வெற்றிப்படிக்கட்டு என்று வெறும் பேச்சுக்குச் சொன்னால் கூட மனதளவில் ஜெயிக்கணும் ஜெயிக்கணும்கற எண்ணம் தான் இருக்கும். ஆனா அதுக்கு என்ன செய்யணும்னு முறையாகத் தெரியாது.
தலைப்பில் உள்ள கேள்வியை உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்தக் கருத்துக்குப் பதில் சொல்லச் சொன்னா ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு சொல்வாங்க. ஆனா அவங்க அதை ரத்தின சுருக்கமா சொல்ல முடியாமத் திணறுவாங்க. அவங்களுக்காகத் தான் இந்தப் பதிவு.
தினமும் இருபது நிமிடமாவது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக ஒதுக்க வேண்டும். இது நமது கவனத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். அதனால் நமது பணிகளில் கூடுதல் திறமை வெளிப்படும்.
இந்த நேரத்தை ஒதுக்க முடியாததால் தான் பலரும் என்ன செய்வது? ஏது செய்வது என தெரியாமல் புலம்பித் தவிக்கின்றனர். இதனால் யார் யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாதவர்களிடம் எல்லாம் தம் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கின்றனர்.
அவர்களும் பிரச்சனையைக் குறைப்பதற்குப் பதில் இன்னும் அதிகமாக்கி விட்டு விடுகிறார்கள். அதனால் நாம் முன்னேற வேண்டுமானால் நமக்காக தினமும் ஒரு இருபது நிமிடமாவது ஒதுக்கி நமது பிளஸ் என்ன மைனஸ் என்ன? எங்கே கோட்டை விட்டுருக்கோம்?
அடுத்து இதைக் களைய என்ன செய்யலாம் என்றும் நமது பாசிடிவ்களை அதிகரிக்கவும் திட்டம் போடலாம். அதை நடைமுறைப்படுத்துவது என்பது அடுத்து எளிதான விஷயமாகி விடும். ஏன்னா நம்மால் செய்ய முடியறதை மட்டும் தான் நாம் பக்கா பிளானுக்குள் கொண்டு வரப்போகிறோம்.
இதை மட்டும் நாம் தினமும் செய்து வந்தால் போதும். நமது மனம் தெளிந்த நீரோடையைப் போல மாறி விடும். அடுத்து நமது செயலும் வெற்றிகரமாகவே இருக்கும். இவற்றின் படிநிலைகள் தான் கீழ்க்கண்டவை.
தன்னை அறிதல், இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடல், தியானம், மூச்சுப்பயிற்சி, ஆராய்தல், நேர மேலாண்மை, அதிகரிக்கும் படைப்பாற்றல், மேம்படுத்தப்பட்ட உணர்ச்சி நுண்ணறிவு, தனிப்பட்ட வளர்ச்சி, சிறந்;த தொடர்பு திறன் என்று நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அதன்பிறகு நீங்க தொட்டதெல்லாம் வெற்றிமயம் தான்.