எல்லோருக்கும் அரசு வேலை கிடைத்துவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். அது தவறு இல்லை. அதற்கேற்ற தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. நாம் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் அளவு அறிவாற்றல், பேச்சாற்றல், மதிநுட்பம் ஆகியவற்றுடன் பர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத்திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் இதற்காக பயமின்றி நமது கடமையைச் செய்து வர வேண்டும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு வரும்போது பயம் வரும். தேர்ச்சி பெறுவோமா இல்லையா என்பது தான் இந்த பயம். இந்த பயம் போக வேண்டும் என்றால் நமக்கு முதலில் திறமையும், நம்பிக்கையும் வேண்டும்.
அத்துடன் என்ன வேண்டும் என்பதை இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கிருபானந்த வாரியாரின் சீடர் தேச மங்கையர்க்கரசி இவ்வாறு கூறுகிறார்.
இறை அருள் கண்டிப்பாக வேண்டும். இறை அருள் என்பது ஒரு தண்டவாளம். தகுதி என்பது ஒரு தண்டவாளம். இரண்டும் இருந்தால் தான் அதில் ரெயில் ஓட முடியும். பொதுவாக குல தெய்வ வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். எந்த ஒரு தெய்வத்தை வேண்டுவதற்கு முன்பும் நாம் வழிபட வேண்டிய முதல் தெய்வம் நமது குல தெய்வம் தான்.
ஆஞ்சநேயர் பெருமாளையும், சனீஸ்வர பகவானையும் நினைத்த வேலை கிடைக்கும் வரை வழிபடலாம். அரசமரத்தடியில் அமர்ந்துள்ள பிள்ளையாருக்கு குளிர குளிர தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து 11 முறை அவரை சுற்றி வணங்கினால் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று வழிபடுபவர்களுக்கு உறுதியாகக் கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல இடத்தில் அமர்ந்து இருந்தால் தான் அரசு வேலை கிடைக்கும். அதனால் சூரிய உதயம் தொடங்கிய 6.15 மணிக்கு சூரியனுக்கு முன்பாக ஓம் க்ரீம் சூரியாயே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
ஞானசம்பந்தப்பெருமாள் அருளிய அற்புத பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்.
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.
ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.
ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக் கேடும்
பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
அப்பர் பெருமாள் அருளிச்செய்த பதிகம். இதையும் பாராயணம் செய்யலாம்.
சிந்திப் பரியன சிந்திப்
பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி
கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ
யாறன் அடித்தலமே.
இது மகாலட்சுமி படத்தை பூஜை அறையில் வைத்து படிக்க வேலைக்காகப் படிக்க வேண்டிய பதிகம்
ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச || ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ|||
மேற்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு வழிபாடைப் பின்பற்றி வந்தாலும் போதும்.