நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். கடவுளிடம் வேண்டும் போதும் நோய் நொடியில்லாத வாழ்வைக் கொடு என்று தான் கேட்பார்கள். அதற்கு முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டியது உணவுமுறை தான்.
ஆரோக்கியமான காலை உணவே நாம் நோயற்ற வாழ்வு வாழத் தேவையான அடிப்படையான விஷயம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 3 வேளையும் அரிசி உணவாகத் தான் சாப்பிடுகிறார்கள். இவர்களுக்கு அதில் தான் கார்போஹைட்ரேட் உள்ளது என்று தெரியவில்லை. இதனால் தான் சர்க்கரை வியாதி வருகிறது.
சிறுதானிய உணவுகளான வரகு, கோதுமை, கேழ்வரகு, ராகி, கம்பம்புல் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. இவற்றை கூழாகவோ களியாகவோ சாப்பிடலாம். இவற்றை காலை, மதியம் மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இரவு கண்டிப்பாகப் பேசக்கூடாது.
அடை தோசை எல்லாம் அடிக்கடி சாப்பிடலாம்.
இட்லி, தோசை தான் நம்மில் பெரும்பாலோனோரின் உணவாக உள்ளது. இதைத் தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டுப் பழகலாம்.
தலைவலி, சுகர் இவற்றிற்கு அருமருந்தான உணவு இது தான.
செக்குல ஆட்டுன நல்லெண்ணை, தேங்காய் எண்ணை இவற்றில் ஏதாவது ஒன்றில் 4 கரண்டி எடுத்து சாப்பிட வேண்டும். இதனால் நல்ல கொழுப்பு தான் நம் உடலில் சேரும். பயப்படத் தேவையில்லை. பசு மாட்டு நெய்யை உருக்கி 4 கரண்டி சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம். தொடர்ந்து வெந்நீர் குடிக்கலாம்.
இதை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் மாசம் தொடர்ந்து செய்தால், கேன்சர், பைல்ஸ், அல்சர், பிஸ்டுலா ஆகிய பெரிய வியாதிகள் குணமாகும். தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் கண்பார்வை நல்லா வரும். முகம் பளபளப்பாகும்.
மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். மனவியாதிகள் முக்கியமாகக் கட்டுக்குள் வரும். நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும், ஆர்தோ பிரச்சனைகளும் தீரும். தொடர்ந்து வாக்கிங் போகலாம். ஏழரை மணிக்கு காலை உணவை சாப்பிடலாம். 8 மணிக்குள் சாப்பிட வேண்டும்.
180 கிராம் தானியங்கள் சாப்பிடலாம். ராஜ உணவுகள் சாப்பிடுவது நல்லது. வெயிட் குறைக்க வேண்டும் என்று காலை உணவைத் தவிர்ப்பது முற்றிலும் தவறு. சோயாபீன்ஸ், சுண்டல், நிலக்கடலை, மொச்சைப் பயறு, பயறு வகைகள் இவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்னு சொல்வாங்க. அப்படி கூட செய்து சாப்பி;டலாம்.
9 மணிக்கு கால் கிலோ ஜூஸ் வகைகள் குடிக்க வேண்டும். கேரட், பீட்ரூட், ஆப்பிள் ஜூஸ் ஏகப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தும்.
2 நாள் மாதுளை, ஒரு நாள் கமலா ஆரஞ்சு, ஒரு நாள் கருப்பு திராட்சை, ஒரு நாள் முலாம்பழம், கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிட்டு வாருங்கள். உங்களை நோயே ஒரு போதும் அண்டாது.
டயாபடிக் நோயாளிகள் அல்லது ஏழரை மணிக்கு பயிறும், எட்டரை மணிக்கு மணிக்கு டம்ளர் பாலும் சாப்பிடுவது ரொம்ப நல்லது.
முக்கியமாக இரவு நேரத்தில் பிசுபிசுப்பான உணவுகளான கோதுமை தோசை, தயிர் சாதம், சோறு என சாப்பிடக்கூடாது.