பெண்ணிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் அந்த சில விஷயங்கள்….!!!

இப்போ உள்ள காலம் படு ஸ்பீடாக உள்ளது. காதலுக்கு டிப்ஸா, கணவனுக்கு டிப்ஸா, மனைவிமார்களுக்கு டிப்ஸா, எந்த டிப்ஸ் வேணும்னாலும் ஒரு சொடக் போடும் நேரத்தில் உங்கள் கைகளில் விடை தவழ்ந்து விடுகிறது. அதனால் யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.

super girl
super girl

உங்களுக்கு என்ன தேவையோ அதை எளிதில் பெற்று விடலாம். பெண் பார்க்கும் படலம் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உள்ளது. ஒரு ஆணுக்கு பெண்ணையோ அல்லது ஒரு பெண்ணுக்கு ஆணையோ எளிதில் பிடித்து விடுவதில்லை.

அவரவர் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் ஆசை அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவை எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அந்த ஆணோ அல்லது அந்த பெண்ணோ பாஸ் மார்க் வாங்குகிறார்கள்.

smiling girl
smiling girl

அப்போது தான் அவர்கள் திருமணம் என்ற அடுத்தக்கட்டத்திற்குச் செல்ல முடியும். அந்த வகையில் பெண்களிடம் எந்தெந்த விஷயங்களைப் பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு பெரிய பட்டியலே உள்ளது. அவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆணின் மனதில் பெண்களுக்கு எந்தெந்த விஷயங்கள் பிடிக்கும் என்று தெரியுமா?

பெண்களின் புன்னகை, கொஞ்சம் சதைப்பிடிப்புடன், அழகான வளைவு நெளிவுகளுடன் அதே சமயம் செம ஜாலியாகப் பேசும் பெண்கள் என்றால் ஆண்களுக்கு சட்டென்று பிடித்து விடும்.

தான் நினைப்பதை அப்படியே சொல்லும் பெண்கள், தலைமுடியைக் கோதி விடும் பெண்கள் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். மேலும் தலைநிறைய மல்லிகைப்பூ வைத்து வரும் பெண்களைப் பார்த்ததுமே ஆண்கள் பிடிக்கிறது என்கிறார்கள்.

பெண்களிடம் ஆண்களுக்கு பிடித்த இன்னொரு முக்கியமான விஷயம் அவர்களின் கூந்தல் அழகு. அதிலும் குறிப்பாக ஆரோக்கியமான அழகான நீண்ட கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் மிகவும் ரசிக்கிறார்கள்.

மேலும் அழகிய புன்னகையை சிந்தும் பெண்களை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த புன்னகை அவர்களின் கண்களை மின்னல் வேகத்தில் சென்றடைகிறது. அந்த புன்னகையில் பெண்களின் சந்தோஷமும், மன நிறைவும் தெரிந்து விடும்.

சுருதியை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். சுருதி என்றதும் சுருதிஹாசன் என்று நினைத்து விடாதீர்கள். குரல் சுருதி தான். இது தெளிவாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருந்தால் அப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புவர்.

girls tone
girls tone

இளமை மற்றும் இனப்பெருக்கம் செய்வதில் ஆரோக்கியமாக இருக்கும் அறிகுறிகள் மற்றும் நம்பகத்தன்மை குரலில் தான் தெரியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இடையின் கீழ்பகுதியை விட இடை சிறியதாக இருந்தால் அது ஆரோக்கியமான கருவுறும் தன்மையைக் குறிக்கும். அதனால் ஆண்களின் பார்வை பொதுவாக இந்தப்பக்கமும் பாயும்.

கண்களை வைத்துத் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று ஆண்கள் எடை போடுவர்.