கரைந்தோடும் மேக்கப்பா? கவலை வேண்டாம்.. இனி இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க…!

Published:

மேக்கப் என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. மணப்பெண் அலங்காரம் போன்ற  ஒப்பனைகள் மட்டும் இன்றி அலுவலகம், கல்லூரிகளுக்கான எளிமையான மேக்கப், ஷாப்பிங், திரைப்படம் என்று செல்லும் போது நோ மேக்கப் லுக் என்று பல விதமாய் ஒப்பனை செய்து தங்களை அழகு படுத்தி கொள்ள பலரும் விரும்புவர். அடுத்தவர்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்று இல்லாமல் நமக்கு நாமே அழகாய் தெரிய வேண்டும் என்பது பலரது விருப்பம்.

make up

இந்த வெயில் காலத்தில் இப்படிப்பட்ட மேக்கப்புகளில் உள்ள மிகப்பெரிய சிக்கல் அதிகபட்ச வெயிலினாலும், வியர்வையினாலும் மேக்கப் எளிதில் கரைந்து விடும். அது முகத்தின் தோற்றத்தையே கெடுத்து விடக் கூடிய வாய்ப்பு உண்டு.

எனவே இந்த கோடை காலத்தில் மேக்கப் கரைந்து விடாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை நாம் பார்க்கலாம்

அனைத்து பருவ காலத்திற்கும் நாம் ஒரே வகையான மேக்கப் சாதனங்களை பயன்படுத்துகிறோம். அவ்வண்ணம் இல்லாமல் கோடை காலத்தின் போது எளிதில் சருமத்துடன் படியக்கூடிய ஜெல் வடிவிலான மேக்கப் சாதனங்களை நாம் பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் பயன்படுத்தும் அனைத்து மேக்கப் சாதனங்களிடம் எஸ்.பி.எஃப் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். இது சூரிய ஒளியிலிருந்து நம் சருமத்தை பாதுகாத்திட வெகுவாக உதவி புரிகிறது. 

வாட்டர் ரெஸிஸ்டண்ட் உள்ள மேக்கப் பொருட்கள் கிடைக்கின்றன. சற்றே விலை அதிகமாக இருந்தாலும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ள தரமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது. இது வியர்வையில் மேக்கப் கரைவதை தடுத்திட உதவுகிறது.

மேக்கப்பிற்கு அடித்தளமான பிரைமர் கோடைகால மேக்கப்பிற்கு மிகவும் அவசியம் இது நம்முடைய மேக்கப்பை நீண்ட நேரம் முகத்தில் அழியாமல் பாதுகாக்கிறது.

அதிகளவு பவுண்டேஷனை கோடை காலத்தில் பயன்படுத்துவதற்கு பதிலாக நாம் முகத்தில் இருக்கும் கருமையை மறைக்க கன்சீலரை மட்டும் பயன்படுத்துவது இயற்கையான தோற்றத்தை தருவதோடு முகம் ஆங்காங்கே திட்டு திட்டாக தெரிவதில் இருந்து தடுக்கிறது.

பெரும்பாலும் சிலருக்கு சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் சத்து அதிகம் இருக்கும் அப்படி எண்ணெய் சத்து கொண்ட சருமத்தை உடையவர்கள் மாய்ஸ்ரைசரை கோடை காலத்தில் தவிர்த்து விடுதல் நல்லது.

பிரைமர், சன் ஸ்கிரீன், கன்சீலர் இவைகளை முகத்திற்கு போட்ட பிறகு லூஸ் பவுடரைக் கொண்டு  மேக்கப்பை லாக் செய்து விடுங்கள். செட்டிங் ஸ்ப்ரே இருப்பின் கூடுதல் நல்லது இவையும் மேக்கப் கலையாமல் இருக்க உதவி புரிகிறது.

கண்ணிற்கு போடக்கூடிய காஜல் எப்பொழுதும் எளிதில் அழிந்திடாத‌ ஸ்மச் ப்ரூப் ஆக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். லிப் பாமை எப்பொழுதும் கையில் வைத்துக் கொள்ளலாம் அவ்வப்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

 

மேலும் உங்களுக்காக...