இந்த எந்திரமான உலகில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள்? பணம் சம்பாதித்து என்ன பயன்? உறவுகளைக் கையாளத் தெரியலையே என மனம் அங்கலாய்க்கிறதா? இதைப் படிங்க…
முதலில் தனிமையை தவிர்த்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். உறவுகளிடம் அணுசரணையாக நடந்து கொள்ளுங்கள். அவமானத்தை அலட்சியப் படுத்துங்கள். துயரத்தை தூசியாய் நினையுங்கள். மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
வெட்ட வெட்ட முடியும் நகமும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக நாம் தலையையோ, விரலையோ குறை கூறுவதில்லை. அது போல உறவினர்களுக்குள் மனஸ்தாபம் வரத் தான் செய்யும். நாம் அனுசரித்து செல்ல வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்பவும் கை விடக் கூடாது. அதைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியோ அனுபவமோ கிடைக்கும்
நீங்கள் யார் என்று மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டாம். இந்த உலகில் நீங்கள் யார் உங்கள் கடமை என்ன என்ற எண்ணத்தோடு வாழுங்கள். சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும், நம்மை பக்குவப்பட வைப்பது நம் மனம் தான். நம் மனமே நமக்கு சிறந்த ஆசிரியர். பிடிவாதம் எப்போதும் பெருந்தன்மையை தன்னுள் அடக்கியாள முனைகிறது.
ஆனால் அதை விடுத்து பெருந்தன்மையிடம் பாடம் கற்றுக்கொள்ள முனைய வேண்டும் . துன்பம் என்பது சில நாட்கள், இன்பம் என்பதும் சில நாட்கள், வாழ்க்கை என்பது மனதில் உறுதி உள்ள வரை, உயிர் உள்ள வரை சிறப்பாக வாழ்ந்து காட்டுவோம்.
கெடுதல் செய்வது பிறர் பழக்கம் என்றாலும், நல்லது செய்வது நம் எண்ணமாக இருக்கட்டும். அவரவர் செயலுக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். பல பேர் உங்களை நல்லவர் என்று கூறியதை மறந்து விட்டு, யாரோ ஒருவர் திட்டியதை மட்டும் மறக்காமல் இருப்பதே மன வேதனைக்கு காரணம். உங்களது பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, சற்றே விலக்கி வை, ஓய்வெடு, நியாயமாக யோசி, பின் செயல்படு. எல்லாம் சுபமாக முடியும். உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் வாழ்வில் வரும் சோதனைகள் சாதனைகளாக மாறி விடும்.