அட.. 3 விதமான மில்க் ஷேக் (Milkshake) ஜில்லுனு வீட்டிலேயே செய்யலாம்…!

By Sowmiya

Published:

மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

food 5227756 1280

மில்க் ஷேக் பலவிதமான சுவைகளில் கிடைக்கிறது. மில்க் ஷேக் குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கடைக்கோ, உணவு விடுதிக்கோ, பேக்கரிகளுக்கோ சென்றால் தான் குடிக்க முடியும் என்ற அவசியம் இல்லை. மில்க் ஷேக் நீங்களே எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.

வாழைப்பழ மில்க் ஷேக்:

milkshake 275494 1280

தேவையான பொருட்கள்:

  • பால் – ஒரு டம்ளர்
  • வாழைப்பழம் – ஒன்று
  • பேரீச்சம் பழம் – இரண்டு
  • சக்கரை – இரண்டு ஸ்பூன்

செய்முறை:

வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.

பேரிச்சம் பழத்தை விதை நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பாலினை சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.

நன்கு அரைந்த பிறகு மிக்ஸியில் வேகமாக வைத்து ஒரு சில நொடிகள் அரைத்த மில்க் ஷேக்கை  கிளாசில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.

மேலே உங்களுக்குப் பிடித்தமான நட்ஸ் களையும் தூவிக் கொள்ளலாம்.

மாம்பழ மில்க் ஷேக்:

istockphoto 1150000171 612x612 1

தேவையான பொருட்கள்:

  • பழுத்த மாம்பழம் – ஒன்று
  • பால் – ஒன்றரை டம்ளர்
  • வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
  • சர்க்கரை – 3 ஸ்பூன்

செய்முறை:

மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்

இதனை மைய அரைத்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.

இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் செய்யும் சேர்த்து மிக்ஸியில் வேகமாக வைத்து சிறிது நேரம் அரைக்கவும்.

இந்த மில்க் ஷேக்கை ஒரு கிளாஸில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து பின் பரிமாறலாம். இதன் மேல் மாம்பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தூவியும் பரிமாறலாம்.

சாக்லேட் மில்க் ஷேக்:

chocolate smoothie 1058191 1280

தேவையான பொருட்கள்:

  • பால் – இரண்டு டம்ளர்
  • கோகோ பவுடர் – மூன்று ஸ்பூன்
  • சாக்லேட் சிரப் – இரண்டு ஸ்பூன்
  • சர்க்கரை – 3 ஸ்பூன்
  • சாக்லேட் சிப்ஸ் – 2 ஸ்பூன்

செய்முறை:

கிளாஸை சாக்லேட் சிரப் கொண்டு அலங்கரித்து அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

மிக்ஸி ஜாரில் பாலினை ஊற்றி அதனுடன் கொக்கோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

சாக்லேட் சிரப் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

இந்த மில்க் ஷேக்கை ஏற்கனவே அலங்கரித்து வைத்த கிளாசில் ஊற்றி ஐஸ் க்யூப் சேர்த்தோ அல்லது குளிர்சாதன பெட்டிகள் சிறிது நேரம் வைத்தோ பரிமாறலாம்.

இதன் மேல் சாக்லேட் பவுடரையோ அல்லது சாக்லேட் சிப்ஸோ தூவி பரிமாறலாம்.

வாவ்… குளு குளு மாம்பழ ஐஸ்கிரீம்… சீசன் முடியும் முன்னரே செய்து அசத்திடுங்க…!

குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது ஃப்ரிட்ஜில் வைத்து கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சர்க்கரைக்கு பதிலாக உங்களுக்கு பிடித்தமான பேரிச்சம் பழம் அல்லது தேன் மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். பாதாம், முந்திரி போன்ற நட்ஸ்களை விருப்பப்பட்டால் அரைக்கும் பொழுது சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் சுவையான மில்க் ஷேக்குகளை வீட்டிலேயே எளிதாக தயார் செய்து விடலாம்.