வாவ்… குளு குளு மாம்பழ ஐஸ்கிரீம்… சீசன் முடியும் முன்னரே செய்து அசத்திடுங்க…!

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம்.

இந்த ஐஸ்கிரீமினை அடிக்கடி கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்தால் குழந்தைகளுக்கு அச்சம் இல்லாமல் கொடுக்கலாம். அதுவும் மாம்பழம் அதிகம் கிடைக்கும் இந்த மாம்பழ சீசனில் சுவையான மாம்பழங்களை வைத்து அனைவருக்கும் பிடித்தமான ஐஸ்கிரீமினை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.

mango icecream

இதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம்.

மாம்பழ ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:

  • நன்கு பழுத்த மாம்பழம் – இரண்டு
  • பால் – ஒரு லிட்டர்
  • கான் ஃபிளார் – இரண்டு ஸ்பூன்
  • காய்ச்சி ஆற வைத்த பால் – அரை டம்ளர்
  • சிறிய மாம்பழ துண்டுகள் – சிறிதளவு
  • சர்க்கரை – ஒரு கப்

istockphoto 1329778858 612x612 1

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை:

அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

பாலில் ஆடை படிந்து வற்ற தொடங்கும் பொழுது காய்ச்சி ஆற வைத்த அரை டம்ளர் பாலில் கான் ஃப்ளாரை கலந்து அடுப்பில் உள்ள பாலுடன் சேர்க்கவும்.

இப்பொழுது பால் கெட்டியாக வருவதை காணலாம் பால் நன்கு கிரீம் போன்ற தன்மையுடன் வற்றி வரும்பொழுது அடுப்பை அணைத்து இந்த பாலினை ஆறவிடவும்.

பழுத்த இரண்டு மாம்பழங்களில் உள்ள சதை பகுதியை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.

ஆறிய பாலினை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் ஏதும் இல்லாதவாறு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு டப்பாவில் அரைத்த மாம்பழக் கரைசலையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த மாம்பழ துண்டுகளையும் போட வேண்டும்.

இப்பொழுது இந்த கரைசலினை மூடி ஃப்ரிட்ஜில் எட்டு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்…!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews