என்னடா வாழ்க்கை? ஒரு முன்னேற்றமும் இல்லையே என அங்கலாய்க்கிறீர்களா? வாழ்க்கையில் எளிதில் முன்னேற வேண்டுமா? அந்த முன்னேற்றம் உங்களுக்குத் தெரியவேண்டுமா? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான். இங்கு சொல்லப்பட்டுள்ள 7 விஷயங்களை மட்டும் உங்கள் மனதை விட்டுத் தூக்கி வீசி விடுங்கள். இதுதான் உங்களை சிறைபடுத்துகிறது. உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளது. வாங்க அவை என்னன்னு பார்க்கலாம்.
நாளை நாளை என்று தள்ளிப் போடாதீர்கள். காலத்தைக் கடத்தாதீர்கள். எந்த ஒரு வேலையை செய்ய வேண்டுமானாலும் உடனே செய்துவிடுங்கள். நாளை இல்லாமலும் போகலாம். முடிவெடுக்க முடியாத மனநிலை: சரியான நேரத்தில், சரியான முடிவெடுக்க முடியாமல் எத்தனை பேர் மனதுக்கு பிடிக்காத வாழ்கையை, வேலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்? அதனால் சரியான முடிவை எடுங்கள்.
நான் எதற்கும் லாயக்கில்லை… அவன்/அவளிடம் இருக்கும் திறமை எனக்கில்லை என்றெல்லாம் எண்ணாதீர்கள். தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுங்கள்.உங்களைப்போல் உங்களால் மட்டுமே இருக்க முடியும். அதிகமாக யோசித்தல்: நடக்காத ஒரு விஷயத்தையோ, ஏன் நடக்க கூட வாய்ப்பில்லாத விஷயத்தையோ நினைத்து காலம் கடத்தாதீர்கள்.
பொதுவாகவே இன்று பலருக்கும் பொறாமை அதிகமாக உள்ளது. பொறாமைப்படுவதை அடியோடு நிறுத்துங்கள்.குறுகிய மனம்: இந்த உலகத்தில் எல்லார்க்கும் வேண்டியது எல்லாம் உள்ளது. பரந்து விரிந்து மனதை விசாலமாக்குங்கள். எல்லா கஷ்டங்களும் எனக்கு மட்டுமே நடக்கிறது என்று ஒரு மாயக்கோட்டை கட்டாதீர்கள். இந்த ஏழு விஷயங்களை தூக்கி எறிந்து விடுங்கள். வாழ்க்கை முன்னேறும்.
இரவில் நேரத்திற்கு தூங்கி விட்டு அதிகாலையில் எழுந்துருங்கள். தினமும் உடல் ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சி செய்யுங்கள். அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தவறாமல் செய்து முடித்து விடுங்கள்.செய்ய வேண்டிய வேலையைக் கஷ்டப்படாமல் ஸ்மார்ட்டாக செய்து பழகுங்கள். இந்தப் பழக்கங்களும் உங்கள் முன்னேற்றத்துக்கு பெரிய ஊன்றுகோலாக இருக்கும்.