ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட். (Give respect take respect) அதாவது மதிப்பைக் கொடுத்து மதிப்பை வாங்கிக்கன்னு அர்த்தம். அதெப்படி? நான்தான் பெரிய ஆள். அவன் சின்னப் பயல் தானே. அவனுக்கு என்ன அப்படி ஒரு தெனாவெட்டு? என்னை மதிக்க மாட்டேங்கிறான்னு நீங்க மல்லுக்கு நிற்காதீங்க.
அது ஒரு பக்கம் நியாயமாக இருந்தாலும் இந்தக் காலத்துப் பசங்க வேறு. அப்ப உள்ளவங்க வேறு. அதனால்தான் மரியாதையைக் கொடுத்து மரியாதையைப் பெற வேண்டியுள்ளது. நாம் எல்லாவற்றையும் கேட்டுப் பெறுவது கூடாது. நம்மைத் தேடி வர வேண்டும். அதுதான் முக்கியம். அப்போது தான் உன் மதிப்பு அதிகரிக்கும்.
மற்றவர்களிடம் உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும் வழிகள்
மற்றவர்களிடம் நேர்மையான அணுகுமுறை. நீங்கள் பேசுவதில் உள்ள கருத்து மற்றவர்களுடைய முன்னேற்றத்தையும் முன்னிறுத்தியதாக இருக்கவேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு புரியவைக்க கூடிய எந்த ஒரு விசயங்களுக்கும் அதற்குரிய ஆதாரங்களை முன்னிறுத்தி பேசுங்கள்.
நீங்கள் மற்றவர்கள் கூறவரும் விசயங்களை முழுமையாக கவனிக்க வேண்டியது அவசியம். அப்போது அவர்கள் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை உணர் வார்கள்.நீங்கள் கூற வரும் விசயங்களில் உள்ள கருத்துக்களை எளிமை யாகவும், மற்றவர்களுக்கு புரியும்படியாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். நீங்கள் பேசும் எந்த ஒரு விசயமும் உண்மையாகவும், சரியானதாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
இந்த உலகில் முக்கால்வாசிப் பிரச்சனை நம்மிடம் இருந்தே வருகின்றன. அதனால் பேசும் வார்த்தையில் கவனம் வைங்க. அடுத்தவர் பேசுவதைக் காது கொடுத்து கேளுங்க. நீங்க பேசுறதை யாரும் மறுக்காத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவ்ளோதான். இனி மதிப்பும், மரியாதையும் உங்களைத் தேடி ஓடி வரும்.