அந்தக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகளைப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் செய்யும் வேலையைப் பார்க்கும்போது இந்த வயதிலும் எப்படி இவ்வளவு வேலைகளை இவர்களால் செய்ய முடிகிறது என்று வியந்து பார்ப்போம்.
வயதான பாட்டி வீட்டு வேலைகளிலும் சரி, வயல்காட்டு வேலை, காட்டு வேலை என அதிரடி காட்டுவார். அதே போல வயதான தாத்தா ஒருபோதும் ஓய்வு என்பதை விரும்பாமல் தன்னால் முடிந்த ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பார். உதாரணத்திற்கு வயல்காட்டில் விவசாயம் செய்வார்.
வாழைத் தோட்டத்திற்குச் சென்று அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வார். இலைகளை அறுத்து வருவார். அவரைப் பார்க்கும்போது 80 வயதானவர் போலவே தெரியாது. ஆனால் 30 வயது வாலிபன் செய்யும் வேலையை அவர் அநாயாசமாக செய்வார்.
ஆனால் தற்போது 30 வயது வாலிபனே 80 வயது தாத்தா செய்யும் வேலை போல மெதுவாகத் தான் செய்து வருகிறான். இதற்கு மிக முக்கிய காரணம் பாரம்பரிய உணவுப்பழக்கம் தான். அந்தக்காலத்தில் கேப்பை, கேழ்வரகு, கம்பம்புல், கோதுமை, தினை என மிகவும் சத்தான தானிய உணவு வகைகள் இருந்தன.
இப்போது இவை கண்காட்சியில் மட்டுமே இடம்பெறுகின்றன. ரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுக்குப் பதிலாக ரத்தத்தை உறிஞ்சும் உணவுகள் தற்போது பரவலாக வந்து விட்டன.
உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களில் ஒன்று. பழங்காலத்தில் மனிதனால் பயன்படுத்தப்பட்ட முதல் தானிய வகை இதுதான். இதை சாப்பிட்டு வருபவர்களின் உடல் வலுவாக இருந்தது.
மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு உணவு தேனும் தினை மாவும் தான். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இதை அப்படியே சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
தினை லட்டு, தினை அதிரசம், தினை கழி, தினை தோசை என விதவிதமாக நமக்கு பிடித்த வகையில் செய்து சாப்பிட்டு வரலாம்.
நம் உடலை நிமிர்ந்து நிற்கச் செய்ய உதவுவது எலும்பு தான். எலும்பு வலுவாக இருந்தால் தான் உடல் வலுவாக உள்ளது என்பார்கள். இதுதான் உடலின் அஸ்திவாரம்.
பால் மற்றும் பாலாடைக்கட்டியில் கால்சியம் அதிகளவில் உள்ளது. இதுதான் எலும்பு பலம்n பற உண்ண வேண்டிய முக்கியமான உணவுப்பொருள்கள். சூரியஒளியில் இருந்து நம் தோல் தயாரிக்கும் வைட்டமின் டியும் எலும்பு பலம்பெற உதவும் முக்கிய ஊட்டச்சத்து.
பால், முட்டை, வேர்க்கடலை, வெல்லம், தயிர், மோர், மீன், கொள்ளுப்பருப்பு, கடலை மாவு சப்பாத்தி, முளை கட்டிய பச்சைப்பயிர் ஆகியவை என்றென்றும் உங்களது உடலை இரும்பு போல திடமாக வைத்திருக்கச் செய்யும்.
தற்போது உள்ள உணவுகளில் பெரும்பாலானவை கலப்பட உணவுகளாக மாறிவிட்டன. இதனால் மனிதர்களுக்கு புதுப்புது வியாதிகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டன. நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போய்விட்டது.
அப்படி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள். ஆனால் அன்றைய பாரம்பரிய உணவுகளில் எல்லாமும் அடக்கம். உடலுக்கு வலு தரும் அத்தகைய உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்தன. மனிதர்களின் வாழ்நாளை அதிகரித்தன.