தந்தையர் தினத்திற்கு உங்கள் தந்தையை எப்படி மகிழ்விப்பது என்ற குழப்பமா? இதோ உங்களுக்காக சூப்பரான 5 யோசனைகள்…!

Published:

தாயின் அன்பிற்கு சிறிதும் குறைவில்லாதது தந்தையின் தியாகம். அதனால் தான் அப்பாவின் பாசத்தை வெளிக்காட்டும்‌ விதத்தில் வரும் திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மனதில் அது திரைப்படம் என்பதையும் தாண்டி ஆழப் பதிந்து விடுகிறது.

images 2 15

ஒரே ஒரு ஊருக்குள்ள என்று தன் பிள்ளைகளை சைக்கிளில் வைத்து சுற்றும் தவமாய் தவமிருந்து என்ற படத்தின் ராமையா என்ற அப்பா கதாபாத்திரம் ஆகட்டும்.

தன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்க கடுமையாய் உழைக்கும் தங்க மீன்கள் என்ற திரைப்படத்தின் அப்பா கதாபாத்திரமாகட்டும்.

கல்லூரி அனுப்பும் போது, திருமணம் செய்து அனுப்பும் போது இப்படி மகளை பிரியும் பொழுது ஏற்படும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும் அபியும் நானும் என்ற திரைப்படத்தின் அப்பா கதாபாத்திரம்..

மனநலம் சரியில்லாத போதும் மகளின் மீது குறைவில்லாத பாசம் வைத்த கிருஷ்ணா என்னும் தெய்வ திருமகள் கதாபாத்திரம் ஆகட்டும்..

சந்தோஷ் சுப்பிரமணியன், வாரணம் ஆயிரம், அப்பா.. இப்படி எத்தனையோ அப்பா கதாபாத்திரங்கள் நம் மனதில் வெற்றி அடைந்ததற்கு காரணம் அனைவரும் தங்கள் தந்தையின் சாயலை அங்கு காண்பதால் தான்.

திரைப்படத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி என்றுமே தந்தையின் பாசம் தோற்பதே இல்லை.

அவரது கண்டிப்பு, கோபம், கட்டுப்பாடு இவற்றிற்கெல்லாம் பின்னால் இருக்கும் மிகப்பெரிய பாசம் பலருக்கும் புரிவதில்லை. தான் ராஜாவாக இல்லாவிட்டாலும் தன் பிள்ளைகளை இளவரசராக/இளவரசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஜீவன்.

தந்தையர் தினத்திற்கு என்ன கிப்ட் வாங்குவது? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அருமையான 5 கிப்ட் ஐடியாக்கள்…!

இப்படிப்பட்ட தந்தைக்கு தந்தையர் தினத்திற்கு (மே 18) என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறீர்களா இதோ உங்களுக்காக சில யோசனைகள்.

  1. உங்கள் தந்தையை அவரது மனதிற்கு நெருக்கமான ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவருடன் பேசுங்கள். அவரின் மலரும் நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக அவரிடம் கேள்வி கேளுங்கள். அவருக்கு முக்கியமான நாள், மறக்க முடியாத நிகழ்வு, அவரது பள்ளி கல்லூரி வாழ்க்கைகளின் நண்பர்கள் இப்படி மலரும் நினைவுகளை மீட்டெடுக்கும் படியாக நீங்கள் கேட்கும் கேள்விகள் உங்கள் தந்தையை ஒரு புத்துணர்வுடன் உணரச் செய்யும்.
  2. நீங்களும் உங்கள் தந்தையும் ஒன்றாக கழித்த இனிய தருணங்களை பற்றி நினைவு கூறுங்கள். அது உங்கள் உறவை இன்னும் பலப்படுத்தும்.
  3. உங்கள் தந்தையை பற்றி உங்களுடைய எண்ணங்களை, அவர் உங்கள் வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு சிறப்பானவர் என்பதை பற்றி ஒரு கவிதையாகவோ அல்லது வாழ்த்து மடலாகவோ நீங்களே உங்கள் கைப்பட எழுதி அதை உங்கள் தந்தைக்கு பரிசாக கொடுங்கள். கடைகளில் விற்கப்படும் வாழ்த்து அட்டைகளை வாங்கிக் கொடுப்பதை விட நீங்களே எழுதிக் கொடுக்கும் பொழுது அது உங்கள் தந்தைக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும்.
  4. உங்கள் தந்தையின் புகைப்படங்களை ஒரு வீடியோ தொகுப்பாக வெளியிட்டு அவருக்கு கொடுக்கலாம். அவரின் சிறு வயது புகைப்படங்களை புதிது செய்தும் கொடுத்து மகிழ்விக்கலாம்.
  5. உங்கள் தந்தைக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பையும் அல்லது ஏதேனும் உணவுப் பொருளையோ நீங்களே உங்கள் கைகளால் செய்து கொடுத்து அவரை மகிழ்விக்கலாம்.

தாய்மையை போல் தந்தைமையையும் போற்றுவோம்..

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!

மேலும் உங்களுக்காக...