ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சொல்வாங்க. அது உண்மைதான். நம் அன்றாட அலுவல்களில் அவசரநிமித்தமாக செய்யும் பல வேலைகளும் சொதப்பி விடுவதுண்டு. இதை நாம் பல முறை அனுபவித்து அல்லல்பட்டிருப்போம். இந்த அவசரத்தால் என்னென்ன விளைவுகள்னு பாருங்க புரோ…
இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம். எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகி விட்டதை நாளும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அர்ஜன்ட் (Urgent) என்கிற வார்த்தையை அதிகமாக நாளும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம்பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறை யாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. மாறாக, பல இழப்புக்களையே சந்திக்க வேண்டியுள்ளது
அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அதிகபட்சமாக அவசியம் இல்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் ஆலோசிப்பதில்லை அதிகமாக அவசரப்படுவதால் சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலக செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகி போய்விடுகிறது
ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் பின் விளைவுகளை ஆலோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது அப்படியானால் எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே
நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து அமைதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்! இக்கலி உலகில் பொறுமையுடன் கூடிய நிதானம் தேவை
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



