மேசை நாகரீகம் அவ்வளவு முக்கியமா? விருந்துக்கு செல்லும் பொழுது இவற்றை பின்பற்ற மறந்துடாதீங்க!

By Sowmiya

Published:

பொதுவாகவே உணவு மேசை நாகரீகம் என்பது அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. மேசை நாகரீகம் ஆளுமையின் ஒரு வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

dinning

நம்முடைய வீட்டில் நாம் நமது விருப்பப்படி உணவினை உண்ணலாம். ஆனால் அலுவலக விருந்துகளிலோ, பொதுவான நண்பர்களுடன் விருந்திற்கு செல்லும் பொழுது, முக்கிய நபர்களின் சந்திப்பின் பொழுது நடைபெறும் விருந்து நிகழ்வுகளிலோ மேசை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். உங்களின் மேசை நாகரீகத்தை வைத்து உங்களை அவர்கள் எளிதில் கணித்து விடுவர். அதனால் கவனமாக பொது இடங்களில் மேசை நாகரீகத்தை கடைப்பிடித்தல் அவசியம்.

Table manners

மனதில் கொள்ள வேண்டிய நடத்தைகள்:

முதன் முறையாக ஒரு உணவு விருந்துக்கு செல்கிறீர்கள் கத்தி, முள் கரண்டி ஆகியவற்றை அதற்கு முன் பயன்படுத்தியதில்லை அப்பொழுதுதான் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு செல்லலாம்.

manners

எப்பொழுதும் வலது கையில் கத்தியையும் இடது கையில் முள் கரண்டியையும் பிடிக்க வேண்டும். முள் கரண்டியினால் உணவுப்பொருள் ஆடாதபடி க்ரிப் கிடைக்கும் வண்ணம் மெதுவாக குத்தி பிடித்துக்கொண்டு கத்தியால் சிறு துண்டாக நறுக்கி முள் கரண்டியினால் எடுத்து உணவினை உண்ண வேண்டும்.

விருந்துக்கு சென்றவுடன் உணவு மேசை மீது உங்களது கைப்பை, மொபைல் போன், பர்ஸ் போன்ற பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் உணவு வந்தவுடன் சாப்பிட தொடங்காமல் அனைவரும் அவர்களது உணவை பெறும் வரை பொறுமையாக காத்திருக்கவும்.

வாயினை திறந்து உணவினை மெல்லாமல் மூடிய படியே உணவுப் பொருட்களை அசைபோடுங்கள். பெரிய துண்டுகளாக இல்லாமல் சிறிய அளவில் உணவுப் பொருளை எடுத்து வாயில் வையுங்கள்.

using knife

ஒருமுறை உங்கள் கையில் கத்தியையும் கரண்டியையும் எடுத்து விட்டால் மீண்டும் மேசை மேல் வைக்கக் கூடாது உங்கள் தட்டின் மீது தான் வைக்க வேண்டும்.

உணவுப் பொருளின் தரம் குறித்தோ சுவை குறித்தோ கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. உணவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் குறைவாக உண்ணுங்கள் குறை கூறாதீர்கள்.

உணவுப் பொருள் உங்கள் மேலே சிந்தும்படியோ இல்லை மேசை மீது சிந்திவிடும் படியோ உண்ணாமல் நிதானமாக உண்ணுங்கள்.

உணவு உண்ணும் பொழுது உங்களுக்கு தும்மல் அல்லது இருமல் போன்றவை ஏற்பட்டால் அதை நாசுக்காக கையாளுங்கள் கை குட்டையை பயன்படுத்த தவறி விடாதீர்கள் அதிக சத்தம் போட்டு விடாமல் கவனமாய் இருங்கள். உடன் வந்திருப்பவரிடம் மன்னியுங்கள் (excuse me) என்று கேட்க மறந்து விடாதீர்கள்.

நாற்காலியில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து உணவு உண்ணுங்கள் வளைந்து கொண்டோ பின்புறமாக சாய்ந்து கொண்டோ உணவு உண்ண வேண்டாம்.

உணவு பரிமாறுபவரை அழைக்கும் பொழுது கையில் கரண்டியை வைத்துக்கொண்டோ அல்லது உணவுப் பொருளை வைத்துக்கொண்டோ அழைக்காதீர்கள்.

food eating

உங்களால் எவ்வளவு உணவு உண்ண முடியுமோ அவ்வளவு மட்டுமே உங்கள் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

தட்டில் உள்ள உணவுகளை உண்ணும் பொழுது ஒழுங்கு முறையை கையாளுங்கள் உங்கள் தட்டில் உள்ள உணவுகளை பார்த்து யாரும் முகம் சுளித்திடாத வண்ணம் ஒழுங்கு முறையை பின்பற்றுங்கள்.

மேலும் உங்களுக்காக...